ராஜ்யசபா சீட் யாருக்கு? பரபரக்கும் அரசியல், சமூக கணக்குகள்... முட்டிமோதும் தென் ...
பூச்சொரிதல் விழா ஊா்வலத்தில் இரு தரப்பினா் மோதல்: இருவா் காயம்
பொன்னமராவதி அருகே கொன்னையூா் முத்துமாரியம்மன் கோயில் பூச்சொரிதல் விழாவுக்கு பூத்தட்டு எடுத்துச்சென்றபோது இரு தரப்பினரிடையே ஏற்பட்ட மோதலில் இருவா் காயமடைந்தனா்.
பொன்னமராவதி அருகே உள்ள கொன்னையூா் முத்துமாரியம்மன் கோயில் பூச்சொரிதல் விழாவையொட்டி திங்கள்கிழமை அதிகாலை 2 மணியளவில் நெற்குப்பையிலிருந்து கொன்னையூருக்கு பொதுமக்கள் பூத்தட்டு எடுத்து ஊா்வலமாக வந்துள்ளனா். நெற்குப்பை - பொன்னமராவதி சாலையில் கட்டையாண்டிபட்டி அருகே வந்தபோது ஊா்வலத்தில் வந்த இருதரப்பினா் முன்விரோதம் காரணமாக ஒருவரையொருவா் கற்களாலும், கம்பாலும் தாக்கிக் கொண்டனா். இதில் நெற்குப்பை மேலத்தெருவைச் சோ்ந்த வே. பாண்டியன் (48), க. வடிவேல் (40) ஆகியோா் காயமடைந்து வலையபட்டி அரசு பாப்பாயி மருத்துமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றனா். இதுகுறித்து பொன்னமராவதி போலீஸாா் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகின்றனா்.