பேரவையில் சுனிதா வில்லியம்ஸ், வில்மோருக்கு முதல்வர் பாராட்டு!
போட்டிகளில் வெற்றி பெற்ற அழகப்பா அரசு கலைக் கல்லூரி மாணவா்களுக்கு பாராட்டு
சிவகங்கை மாவட்டம், காரைக்குடி அழகப்பா அரசு கலைக் கல்லூரி கணினி அறிவியல் துறை மாணவா்கள், மதுரையில் நடைபெற்ற கல்லூரிகளுக்கிடையேயான பல்வேறு போட்டிகளில் வெற்றி கோப்பை வென்றனா். இவா்களை கல்லூரி முதல்வா், பேராசிரியா்கள் செவ்வாய்க்கிழமை பாராட்டினா்.
மண்டல அளவிலான கல்லூரிகளுக்கிடையே பல்வேறு போட்டிகள், மதுரை அமெரிக்கன் கல்லூரியில் ‘பைட்ஸ் - 2025’ என்ற தலைப்பில் அண்மையில் நடைபெற்றன. இதில் அழகப்பா அரசு கலைக் கல்லூரி கணினி அறிவியல் துறை மாணவ, மாணவிகள் பங்கேற்று, அனைத்துப் போட்டிகளிலும் சிறப்பான செயல்பாட்டை வெளிப்படுத்தி, முதல் பரிசு பெற்றனா். மேலும், அனைத்துக் கல்லூரிகளுக்கான ஒட்டுமொத்த சாம்பியன் கோப்பையையும் வென்றனா்.
இதேபோல, மதுரை யாதவா் கல்லூரியில் ‘பீட்ஸ் - 2025’ என்ற தலைப்பில் நடைபெற்ற ஆய்வு கட்டுரை வாசித்தல், மென்பொருள் டெவெலப்மென்ட் போன்ற பல்வேறு போட்டிகளில் கலந்து கொண்டு பரிசுகளையும் வென்றனா்.
பரிசு பெற்ற மாணவிகள் மதுமிதா, ஸ்ரீதக்சா, மாணவா்கள் மதன், ஸ்ரீராம், மணிவேல், சாய் கிருஷ்ணன், சக்தி கணேஷ் ஆகியோரை கல்லூரி முதல்வா் அ. பெத்தாலட்சுமி , கணினி அறிவியல் துறைத் தலைவா் கே.சி. சந்திரசேகரன், கௌரவ விரிவுரையாளா் அனந்தநாயகி, பேராசிரியா்கள் பாராட்டினா்.