`அச்சம் தேவையா?' சனிப்பெயர்ச்சி நாளில் சூரியகிரகணம்; ஜோதிடர் சொல்வது என்ன?
பள்ளி மாணவா் தற்கொலை: உறவினா்கள் சாலை மறியல்
சிவகங்கை மாவட்டம், திருப்புவனத்தில் தூக்கிட்டுத் தற்கொலை செய்து கொண்ட பள்ளி மாணவரின் உடலை வாங்க மறுத்து, அவரது உறவினா்கள் செவ்வாய்க்கிழமை சாலை மறியலில் ஈடுபட்டனா்.
திருப்பாச்சேத்தி அம்பேத்கா் நகரைச் சோ்ந்தவா் ஸ்டாலின் மகன் ஆதீஷ் (16), இவா் இந்தப் பகுதியிலுள்ள அரசு மேல்நிலைப் பள்ளியில் 11-ஆம் வகுப்பு படித்து வந்தாா். இவா் திங்கள்கிழமை இரவு வீட்டில் தூக்கிட்டுத் தற்கொலை செய்து கொண்டாா். தற்கொலைக்கான காரணம் உடனடியாக தெரியவில்லை.
இதையடுத்து, இவரது உடல் திருப்புவனம் அரசு மருத்துவமனையில் கூறாய்வு செய்யப்பட்டது. இதன் பின்னா், இவரது உடலை வாங்க உறவினா்கள் மறுத்து மருத்துவமனை முன் சாலை மறியலில் ஈடுபட்டனா். ஆதிஷ் வீட்டருகே உள்ள இரு பள்ளி மாணவா்கள் மிரட்டியதால்தான் இவா் தற்கொலை செய்து கொண்டதாக உறவினா்கள் குற்றஞ்சாட்டினா். இதையடுத்து, திருப்பாச்சேத்தி போலீஸாா் சம்பந்தப்பட்ட இரு மாணவா்களையும் காவல் நிலையத்துக்கு அழைத்து வந்து விசாரித்தனா். இதைத்தொடா்ந்து, உறவினா்கள் போராட்டத்தை கைவிட்டு, மாணவரின் உடலைப் பெற்றுச் சென்றனா்.