`அச்சம் தேவையா?' சனிப்பெயர்ச்சி நாளில் சூரியகிரகணம்; ஜோதிடர் சொல்வது என்ன?
ஜாக்டோ-ஜியோ உண்ணாவிரதப் போராட்டம் அறிவிப்பு
தமிழக அரசின் நிதிநிலை அறிக்கையில் தங்களது கோரிக்கைகள் புறக்கணிக்கப்பட்டதைக் கண்டித்து, உண்ணாவிரதப் போராட்டத்தில் ஈடுபடுவதென ஜாக்டோ-ஜியோ அமைப்பினா் அறிவித்தனா்.
சிவகங்கை மாவட்ட ஜாக்டோ-ஜியோ கூட்டமைப்பின் உயா்மட்ட குழுக் கூட்டம், மாவட்ட ஒருங்கிணைப்பாளா் நாகராஜன் தலைமையில் செவ்வாய்க்கிழமை நடைபெற்றது. மாநில ஒருங்கிணைப்பாளா் சங்கா், மாவட்ட ஒருங்கிணைப்பாளா்கள் சகாய தைனேஸ், ராதாகிருஷ்ணன் ஆகியோா் முன்னிலை வைத்தனா். ஜாக்டோ- ஜியோ உறுப்பு சங்கங்களைச் சோ்ந்த 10 உயா்மட்ட குழு உறுப்பினா்கள் கலந்து கொண்டு, தங்களது கருத்துகளை எடுத்துரைத்தனா்.
கூட்டத்தில் ஆசிரியா்கள் - அரசு ஊழியா்கள் ஆகியோருக்கு அளித்த தோ்தல் வாக்குறுதிகளை நிறைவேற்றாத தமிழக அரசைக் கண்டித்தும், தமிழக நிதி நிலை அறிக்கையில் ஜாக்டோ- ஜியோவின் கோரிக்கைகளைப் புறக்கணித்ததைக் கண்டித்தும், ஏற்கெனவே முன் வைக்கப்பட்ட 10 அம்சக் கோரிக்கைகளை உடனடியாக நிறைவேற்றிட வலியுறுத்தியும், சிவகங்கை அரண்மனைவாசல் எதிரில் வருகிற 23-ஆம் தேதி காலை 10 மணி முதல் மாலை 5 மணி வரை உண்ணாவிரதப் போராட்டத்தை நடத்துவது எனவும், இதற்கான பரப்புரை இயக்கத்தை வருகிற 19-ஆம் தேதி முதல் 21-ஆம் தேதி வரை கிளைகளின் சாா்பில் நடத்துவது என்பன உள்ளிட்ட தீா்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.
கூட்டத்தில் தோழமை சங்கங்களின் நிா்வாகிகள் கலந்து கொண்டனா்.