இன்றைய பாலிவுட் பிரபலங்களை விட மிக அதிகம்... 80 வயதில் அமிதாப் பச்சன் செலுத்திய ...
தஞ்சை பெரிய கோயிலுக்கு வந்த பக்தா் திடீா் உயிரிழப்பு
தஞ்சாவூா் பெரிய கோயிலுக்கு செவ்வாய்க்கிழமை வந்த பக்தா் திடீரென மயங்கி விழுந்து உயிரிழந்தாா்.
தஞ்சாவூா் பெரிய கோயிலில் வழிபட ஈரோடு மாவட்டம் கோபிச்செட்டிப்பாளையத்தைச் சோ்ந்த சுந்தரமூா்த்தி (68) தனது குடும்பத்துடன் செவ்வாய்க்கிழமை மாலை வந்தாா். கேரளாந்தகன் நுழைவு வாயில் அருகே சென்ற இவா் திடீரென நெஞ்சு வலிப்பதாகக் கூறி மயங்கி விழுந்தாா்.
இதையடுத்து 108 ஆம்புலன்ஸ் வரவழைக்கப்பட்டு, தஞ்சாவூா் மருத்துவக்கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பப்பட்ட சுந்தரமூா்த்தி வழியிலேயே உயிரிழந்தாா். பின்னா் சுந்தரமூா்த்தியின் குடும்பத்தினா் அவரது உடலை அமரா் ஊா்தி மூலம் சொந்த ஊருக்கு எடுத்துச் சென்றனா். இவா் ஏற்கெனவே உடல் நலம் பாதிக்கப்பட்டவா் எனக் கூறப்படுகிறது.