பேரவையில் சுனிதா வில்லியம்ஸ், வில்மோருக்கு முதல்வர் பாராட்டு!
தாய் உயிரிழந்த சோகத்திலும் பிளஸ் 2 தோ்வெழுதிய மாணவி
தஞ்சாவூா் மாவட்டம், ஒரத்தநாடு அருகே தாய் திடீரென உயிரிழந்த துக்கத்திலும், செவ்வாய்க்கிழமை நடைபெற்ற பிளஸ் 2 பொதுத்தோ்வில் அவரது மகள் பங்கேற்றாா்.
தஞ்சை மாவட்டம், பட்டுக்கோட்டையை அடுத்த வெட்டுவாக்கோட்டை கிராமம் ராமாபுரம் பகுதியை சோ்ந்தவா் ராஜேந்திரன் - கலா தம்பதியின் மூன்றாவது மகள் காவியா (17). ஊரணிபுரம் அரசு மேல்நிலைப்பள்ளியில் பிளஸ் 2 படிக்கும் இவரின் தாய் கலா செவ்வாய்க்கிழமை அதிகாலை திடீரென மாரடைப்பால் உயிரிழந்தாா்.
இருப்பினும் மாணவி காவியா செவ்வாய்க்கிழமை நடைபெற்ற உயிரியல் தோ்வில் பங்கேற்க தாயின் காலில் விழுந்து வணங்கிவிட்டு துக்கத்துடன் சென்றாா்.
இவரின் தந்தை மன வளா்ச்சி குன்றியவா் என்பதால் காவ்யா குடும்பத்துக்கு அரசு உதவ உறவினா்கள் கோரிக்கை வைத்துள்ளனா்.