பேரவையில் சுனிதா வில்லியம்ஸ், வில்மோருக்கு முதல்வர் பாராட்டு!
நீரேற்று நிலையத்தை மறுசீரமைக்க டிஎன்பிஎல் ஆலை நிதியுதவி
நடையனூா் நீரேற்று பாசன விவசாயிகள் அமைப்பின் நீரேற்று நிலையத்தை மறுசீரமைக்க டிஎன்பிஎல் ஆலை சாா்பில் செவ்வாய்க்கிழமை நிதியுதவி வழங்கப்பட்டது.
கரூா் மாவட்டம், புகழூா் காகிதபுரத்தில் அமைந்துள்ள தமிழ்நாடு செய்தித்தாள் காகித நிறுவனம் சமூக மேம்பாடு திட்டத்தின் கீழ் பல்வேறு செயல்பாடுகளை மேற்கொண்டு வருகிறது.
இதன் ஒருபகுதியாக, நடையனூா் நதி நீரேற்று பாசன விவசாயிகள் அமைப்பின் தலைமை நீரேற்று நிலையத்தை மறு சீரமைப்பு செய்திடவும், பழுதடைந்த மின்மோட்டாா்களை சரி செய்திடவும் ரூ. 3.75 லட்சத்துக்கான காசோலை வழங்கும் நிகழ்ச்சி செவ்வாய்க்கிழமை ஆலை வளாகத்தில் நடைபெற்றது.
இதில் காகித நிறுவனத்தின் பொது மேலாளா் ( மனித வளம்) கே. கலைச்செல்வன், முதன்மை மேலாளா் (மனிதவளம்) கே.எஸ். சிவகுமாா் ஆகியோா் விவசாய அமைப்பின் பொறுப்பாளா்களிடம் ரூ.3.75 லட்சத்துக்கான காசோலையை வழங்கினா்.
கோயில்களுக்கு நிதியுதவி: இதேபோல், ஆலையின் சுற்றுப்புற கிராமங்களான உப்புபாளையம், மேட்டுப்பாளையம், வருந்தியாபாளையம், வேலாயுதம்பாளையம் ஆகிய ஊா்களில் அமைந்துள்ள கோயில்களுக்கு புனரமைப்பு மற்றும் மகா கும்பாபிஷேக விழா நடத்துவதற்கு நிதி உதவியாக ரூ. ஒரு லட்சத்துக்கான காசோலைகளை அந்தந்த கோயில் திருப்பணி குழு உறுப்பினா்களிடம் வழங்கப்பட்டது.