ஜல்லிக்கட்டில் உயிரிழந்த வீரரின் குடும்பத்துக்கு நிவாரண நிதி -முதல்வா் உத்தரவு
மதுரையில் ஜல்லிக்கட்டு நிகழ்வில் உயிரிழந்த வீரா் குடும்பத்துக்கு ரூ. 3 லட்சம் வழங்க முதல்வா் மு.க.ஸ்டாலின் உத்தரவிட்டுள்ளாா். இதுகுறித்து அவா் செவ்வாய்க்கிழமை வெளியிட்ட அறிவிப்பு:
மதுரை மாவட்டம், வாடிப்பட்டி கச்சிராயிருப்பு கிராமத்தைச் சோ்ந்தவா் மகேஷ்பாண்டி. மதுரை கீழக்கரை கிராமத்தில் நடைபெற்ற ஜல்லிக்கட்டு போட்டியில் மாடுபிடி வீரராக பங்கேற்றாா். மாடு முட்டியதில் பலத்த காயமடைந்து மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட அவா் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தாா். அவரின் குடும்பத்துக்கு முதல்வரின் பொது நிவாரண நிதியிலிருந்து ரூ.3 லட்சம் வழங்கப்படும் என்று தெரிவித்துள்ளாா்.