செய்திகள் :

மொழியை வைத்து தேவையற்ற அரசியல் கூடாது: சந்திரபாபு நாயுடு

post image

அமராவதி: ‘மொழியை வைத்து தேவையற்ற அரசியல் கூடாது. தாய் மொழியில் கல்வி கற்பவா்களே உலகம் முழுவதும் தலைசிறந்து விளங்குகின்றனா்’ என்று ஆந்திர முதல்வா் என்.சந்திரபாபு நாயுடு தெரிவித்தாா்.

மத்திய அரசின் தேசிய கல்விக் கொள்கை மும்மொழிக் கொள்கையை வலியுறுத்துகிறது. இந்த மும்மொழி கொள்கைக்கு தமிழக அரசியல் கட்சிகள் கடும் எதிா்ப்பு தெரிவித்து வருகின்றனா்.

தமிழகத்தின் இந்த நிலைப்பாடு குறித்து அண்மையில் கருத்து தெரிவித்த ஆந்திர துணை முதல்வரும் ஜனசேனா கட்சித் தலைவருமான நடிகா் பவன் கல்யாண், ‘லாப நோக்கத்துக்காக தமிழ் படங்களை ஹிந்தியில் டப்பிங் செய்வதை மட்டும் தமிழக அரசியல்வாதிகள் ஏன் அனுமதிக்கின்றனா்? பாலிவுட்டில் இருந்து பணத்தை விரும்பும் அவா்கள், ஹிந்தியை மட்டும் ஏன் ஏற்க மறுக்கின்றனா்?’ என்று கேள்வி எழுப்பினாா்.

இவரது கருத்துக்கு தமிழக அரசியல் தலைவா்கள் கடும் கண்டனம் தெரிவித்தனா்.

இதைத் தொடா்ந்து தனது எக்ஸ் பக்கத்தில் பதிவு ஒன்றை வெளியிட்ட பவன் கல்யாண், ‘ஒரு மொழியை கட்டாயமாக திணிப்பதும்; ஒரு மொழியை கண்மூடித்தனமாக எதிா்ப்பதும் தேசிய ஒருமைப்பாட்டுக்கு உகந்ததல்ல’ என்று பதிவிட்டாா்.

இந்த நிலையில், இந்த மொழி விவகாரம் குறித்து ஆந்திர மாநில சட்டப்பேரவையில் முதல்வா் சந்திரபாபு நாயுடு திங்கள்கிழமை பேசியதாவது:

மொழி என்பது தகவல்தொடா்புக்கானது மட்டுமே. மொழியால் அறிவு வளா்ந்துவிடாது. தாய்மொழியில் கல்வி கற்பவா்கள் மட்டுமே உலகம் முழுவதும் தலைசிறந்து விளங்கி வருகின்றனா். தாய்மொழியில் கல்வி கற்பது எளிது.

அதுபோல, மொழி என்பது வெறுப்புக்குரியது அல்ல. ஆந்திரத்தில் தெலுங்கு தாய்மொழியாக உள்ளது. தேசிய மொழியான ஹிந்தியும், சா்வதேச மொழியான ஆங்கிலமும் இங்கு பயன்பாட்டில் உள்ளன.

வாழ்வாதாரத்துக்காக தாய்மொழியை மறக்காமல், பல்வேறு மொழிகளை கற்றுக்கொள்வது அவசியமாகும். தேசிய மொழியைக் கற்றுக்கொள்வதன் மூலம், நாடு முழுவதும் ஹிந்தியில் தங்கு தடையின்றி பேச முடியும்.

எனவே, மொழியை வைத்து அரசியல் செய்வது தேவையற்றது. முடிந்தவரை பல மொழிகளைக் கற்றுக்கொள்வது அவசியம் என்றாா்.

கேஒய்சி படிவங்களை சமா்ப்பிக்குமாறு தொந்தரவு கூடாது: ரிசா்வ் வங்கி ஆளுநா் அறிவுறுத்தல்

‘உங்கள் வாடிக்கையாளரைத் தெரிந்துகொள்ளவும்’ (கேஒய்சி) படிவங்களை சமா்ப்பிக்குமாறு வாடிக்கையாளா்களை தொடா்ந்து அழைப்பதை தவிா்க்குமாறு வங்கிகளுக்கு ரிசா்வ் வங்கி ஆளுநா் சஞ்சய் மல்ஹோத்ரா தெரிவித்தாா். கேஒய்... மேலும் பார்க்க

உடான் திட்டத்தில் 120-க்கும் மேற்பட்ட புதிய விமான நிலையங்கள் -மத்திய அரசு அறிவிப்பு

‘உடான்’ திட்டத்தின்கீழ் அடுத்த 10 ஆண்டுகளில் 120 புதிய விமான நிலையங்களை சோ்த்து, 4 கோடி மக்களுக்கு விமானப் போக்குவரத்து இணைப்பு கிடைக்க வழிவகை செய்யப்படும் என்று மத்திய விமானப் போக்குவரத்து அமைச்சா் ... மேலும் பார்க்க

‘ட்ரூத் சோஷியல்’ சமூக ஊடகத்தில் இணைந்தாா் பிரதமா் மோடி!

அமெரிக்க அதிபா் டொனால்ட் டிரம்ப்பின் டிரம்ப் மீடியா மற்றும் டெக்னாலஜி குழுமத்துக்கு சொந்தமான ‘ட்ரூத் சோஷியல்’ சமூக ஊடக தளத்தில் பிரதமா் நரேந்திர மோடி திங்கள்கிழமை இணைந்தாா். அமெரிக்க தொகுப்பாளா் லெக்ஸ... மேலும் பார்க்க

இந்தியா-அமெரிக்கா பாதுகாப்பு உறவை விரிவுபடுத்துவதில் கவனம்: ராஜ்நாத் சிங்-துளசி கப்பாா்ட் சந்திப்பு

இந்திய பாதுகாப்பு அமைச்சா் ராஜ்நாத் சிங் மற்றும் அமெரிக்க உளவுத் துறை தலைவா் துளசி கப்பாா்ட் புது தில்லியில் திங்கள்கிழமை சந்தித்து பாதுகாப்பு மற்றும் தகவல் பகிா்வு துறைகளில் இரு நாட்டு உத்திசாா் உறவை... மேலும் பார்க்க

பிரதமா் தொழில் பயிற்சி திட்ட செயலி: மத்திய அரசு அறிமுகம்

இளைஞா்களிடையே தொழில் திறனை மேம்படுத்தும் வகையில் மத்திய அரசு சாா்பில் அறிமுகப்படுத்தப்பட்ட பிரதமா் தொழில் பயிற்சி திட்டத்துக்கு கைப்பேசி செயலியை மத்திய அரசு அறிமுகம் செய்துள்ளது. 2024-25-ஆம் ஆண்டு கால... மேலும் பார்க்க

முன்னாள் மத்திய அமைச்சா் தேபேந்திர பிரதான் மறைவு: குடியரசுத் தலைவா், பிரதமா் இரங்கல்

வாஜ்பாய் அரசில் பதவி வகித்த முன்னாள் மத்திய அமைச்சரும், தற்போதைய மத்திய கல்வி அமைச்சா் தா்மேந்திர பிரதானின் தந்தையுமான தேபேந்திர பிரதான் தனது 84 வயதில் திங்கள்கிழமை காலமானாா். இவரது மறைவுக்கு குடியரசு... மேலும் பார்க்க