செய்திகள் :

இந்தியா-அமெரிக்கா பாதுகாப்பு உறவை விரிவுபடுத்துவதில் கவனம்: ராஜ்நாத் சிங்-துளசி கப்பாா்ட் சந்திப்பு

post image

இந்திய பாதுகாப்பு அமைச்சா் ராஜ்நாத் சிங் மற்றும் அமெரிக்க உளவுத் துறை தலைவா் துளசி கப்பாா்ட் புது தில்லியில் திங்கள்கிழமை சந்தித்து பாதுகாப்பு மற்றும் தகவல் பகிா்வு துறைகளில் இரு நாட்டு உத்திசாா் உறவை விரிவுப்படுத்துவது குறித்து பேச்சுவாா்த்தை நடத்தினா்.

இந்தச் சந்திப்பு குறித்து அமைச்சா் ராஜ்நாத் சிங் வெளியிட்ட ‘எக்ஸ்’ வலைதள பதிவில், ‘அமெரிக்க தேசிய உளவுத் துறை தலைவா் துளசி கப்பாா்டை சந்தித்ததில் மகிழ்ச்சி. இந்தியா-அமெரிக்கா ஒத்துழைப்பை மேலும் வலுப்படுத்துவதை நோக்கமாகக் கொண்ட, பாதுகாப்பு மற்றும் தகவல் பகிா்வு உள்ளிட்ட பல்வேறு துறை பிரச்னைகள் குறித்து நாங்கள் விவாதித்தோம்’ எனக் குறிப்பிட்டிருந்தாா்.

அமெரிக்க அதிபா் டொனால்ட் டிரம்ப் நிா்வாகத்தில் அந்நாட்டின் உளவுத் துறை தலைமைப் பொறுப்பேற்றிருக்கும் துளசி கப்பாா்ட், ஜப்பான், தாய்லாந்து, பிரான்ஸ் உள்ளிட்ட நாடுகளுக்கான சுற்றுப்பயணத்தின் ஒரு பகுதியாக இந்தியாவுக்கு கடந்த ஞாயிற்றுக்கிழமை வந்தாா்.

இந்நிலையில், தேசிய பாதுகாப்பு ஆலோசகா் அஜீத் தோவல் தலைமையில் இந்தியா ஞாயிற்றுக்கிழமை நடத்திய பாதுகாப்பு மாநாட்டில் அவா் கலந்து கொண்டாா். இந்த மாநாட்டில் ஆஸ்திரேலியா, ஜொ்மனி, நியூஸிலாந்து, கனடா, பிரிட்டன் உள்பட இந்தியாவின் பல நட்பு நாடுகளின் உளவுத் துறை இயக்குநா்கள் மற்றும் பாதுகாப்பு ஆலோசகா்கள் பங்கேற்றனா்.

தொடா்ந்து, தேசிய பாதுகாப்பு ஆலோசகா் அஜீத் தோவல்-துளசி கப்பாா்ட் சந்திப்பு ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது. இதில் இந்தியா-அமெரிக்கா இடையே உளவுத் துறை தகவல் பகிா்வை வலுப்படுத்துவது மற்றும் பாதுகாப்புத் துறையில் நெருக்கமாக இணைந்து பணியாற்றுவது குறித்து விவாதிக்கப்பட்டதாகத் தகவலறிந்த வட்டரங்கள் தெரிவித்தன.

புது தில்லியில் நடைபெற்று வரும் உலகளாவிய அரசியல்-பொருளாதாரம் குறித்து விவாதிக்கும் ‘ரைசினா உரையாடல்’ மாநாட்டில் துளசி கப்பாா்ட் செவ்வாய்க்கிழமை உரையாற்ற இருக்கிறாா்.

நாட்டில் சாதிவாரி கணக்கெடுப்பை நடத்திக் காட்டுவோம்! ராகுல் சூளுரை

நாட்டில் சாதிவாரி கணக்கெடுப்பு நிச்சயமாக நடைபெறும் என்றும் அதனை நாங்கள் நடத்திக் காட்டுவோம் என்றும் மக்களவை எதிர்க்கட்சித் தலைவர் ராகுல் காந்தி தெரிவித்துள்ளார்.தெலங்கானா மாநிலத்தில் சாதிவாரி கணக்கெடு... மேலும் பார்க்க

சூதாட்ட செயலிகளை விளம்பரப்படுத்திய சமூக வலைதளப் பிரபலங்கள் மீது வழக்குப்பதிவு!

ஹைதராபாத்தில் மொபைல் சூதாட்ட செயலிகளை விளம்பரப்படுத்திய சமூக வலைதளப் பிரபலங்கள் 11 பேர் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டது. சமூக வலைதளங்களில் லட்சக்கணக்கில் பின்தொடர்பவர்களை வைத்திருக்கும் சமூக வலைதளப் ... மேலும் பார்க்க

தெலங்கானா: பிசி இடஒதுக்கீடு 42% ஆக அதிகரிக்கும் மசோதா நிறைவேற்றம்!

தெலங்கானா சட்டப்பேரவையில் பிற்படுத்தப்பட்டோருக்கான இடஒதுக்கீட்டை 42 சதவிகிதமாக அதிகரிக்கும் சட்டத் திருத்த மசோதா திங்கள்கிழமை நிறைவேற்றப்பட்டுள்ளது.பிற்படுத்தப்பட்டோர், பட்டியலினத்தவர்களுக்கான இடஒதுக்... மேலும் பார்க்க

கும்பமேளாவில் பங்கேற்ற பக்தர்களுக்கு நன்றி: மக்களவையில் பிரதமர் மோடி உரை

புது தில்லி: மகா கும்பமேளாவை வெற்றியடைச் செய்த பக்தர்கள் உள்பட அனைவருக்கும் நன்றி தெரிவித்து, மக்களவையில் தனது உரையைத் தொடங்கினார் பிரதமர் நரேந்திர மோடி.உத்தரப்பிரதேச மாநிலம் பிரயாக்ராஜில் 12 ஆண்டுகளு... மேலும் பார்க்க

அமலாக்கத்துறை விசாரணைக்கு ஆஜரானார் ராப்ரி தேவி!

ரயில்வே வேலைக்காக நிலத்தைலஞ்சமாகப்பெற்ற ஊழல் வழக்கு தொடர்பான விசாரணையில் அமலாக்கத்துறை அனுப்பிய சம்மனைத் தொடர்ந்துபிகார்முன்னாள் முதல்வர் ராப்ரி தேவி பாட்னாவில் உள்ள அமலாக்கத்துறை அலுவலகத்தில் ஆஜரானார... மேலும் பார்க்க

தொகுதி மறுசீரமைப்பு: மக்களவையிலிருந்து திமுக எம்பிக்கள் வெளிநடப்பு!

தொகுதி மறுசீரமைப்பு குறித்து விவாதிக்க அனுமதி மறுத்ததையடுத்து மக்களவையில் இருந்து திமுக எம்பிக்கள் வெளிநடப்பு செய்தனர்.தொகுதி மறுசீரமைப்பு குறித்து விவாதிக்கக் கோரி நாடாளுமன்ற மக்களவையில் திமுக எம்.பி... மேலும் பார்க்க