செய்திகள் :

நாட்டில் சாதிவாரி கணக்கெடுப்பை நடத்திக் காட்டுவோம்! ராகுல் சூளுரை

post image

நாட்டில் சாதிவாரி கணக்கெடுப்பு நிச்சயமாக நடைபெறும் என்றும் அதனை நாங்கள் நடத்திக் காட்டுவோம் என்றும் மக்களவை எதிர்க்கட்சித் தலைவர் ராகுல் காந்தி தெரிவித்துள்ளார்.

தெலங்கானா மாநிலத்தில் சாதிவாரி கணக்கெடுப்பு நடத்தப்பட்டு, அதனடிப்படையில் பிற்படுத்தப்பட்டோருக்கான இடஒதுக்கீட்டை அதிகரிக்கும் மசோதாவை சட்டப்பேரவையில் நேற்று நிறைவேற்றினர்.

பிற்படுத்தப்பட்டோருக்கான இடஒதுக்கீடு 29 சதவிகிதத்தில் இருந்து 42 சதவிகிதமாக அதிரடியாக உயர்த்தி மசோதாவை ஒருமதனாக நிறைவேற்றியுள்ளது தெலங்கானா அரசு.

இதையும் படிக்க : தெலங்கானா: பிசி இடஒதுக்கீடு 42% ஆக அதிகரிக்கும் மசோதா நிறைவேற்றம்!

இதுகுறித்து எக்ஸ் தளத்தில் பதிவிட்டுள்ள ராகுல் காந்தி கூறியிருப்பதாவது:

”தெலங்கானாவில் பிற்படுத்தப்பட்டோருக்கான இடஒதுக்கீட்டை அதிகரிப்போம் என்று காங்கிரஸ் அளித்த வாக்குறுதி நிறைவேற்றப்பட்டுள்ளது.

மாநிலத்தில் அறிவியல் பூர்வமாக நடத்தப்பட்ட சாதிவாரி கணக்கெடுப்பில் பிற்படுத்தப்பட்ட சமூகத்தினரின் உண்மையான எண்ணிக்கை கண்டறியப்பட்டதன் மூலம் கல்வி, வேலைவாய்ப்பு மற்றும் அரசியலில் அவர்களுக்கு சம பங்களிப்பை உறுதி செய்யும் நோக்கில், இடஒதுக்கீட்டை 42 சதவிகிதமாக உயர்த்தி மசோதா நிறைவேற்றப்பட்டுள்ளது.

சமூக நீதியை நோக்கிய புரட்சிகரமான முன்னெடுப்பாகும். இதன்மூலம் 50 சதவிகித இடஒதுக்கீடு என்ற சுவர் இடிக்கப்பட்டுள்ளது.

சாதிவாரி கணக்கெடுப்பு தரவுகளைப் பயன்படுத்தி ஒவ்வொரு சமூகத்தின் சமூக மற்றும் பொருளாதார நிலைமைகளை பகுப்பாய்வு செய்வதன் மூலம், அனைவரின் நல்வாழ்வையும் உறுதி செய்யும் வகையில் கொள்கைகள் வகுக்கப்படும். இதற்கான குழுவையும் தெலங்கானா அரசு அமைத்துள்ளது.

தெலங்கானா காட்டிய வழியை நாடு முழுவதும் பின்பற்ற வேண்டும். நாட்டில் சாதிவாரி கணக்கெடுப்பு நிச்சயமாக நடைபெறும். நாங்கள் அதனை நடத்திக் காட்டுவோம்” எனப் பதிவிட்டுள்ளார்.

ஜெர்மனியைவிட இந்தியாவில் ரயில் தடங்கள் அதிகம்: மத்திய அமைச்சர்

ரயில்வே பாதுகாப்பில் பிரதமர் நரேந்திர மோடி அதிக கவனம் செலுத்துவதாக மத்திய அமைச்சர் அஸ்வினி வைஷ்ணவ் கூறினார்.மக்களவைக் கூட்டத்தில் மத்திய ரயில்வே அமைச்சர் அஸ்வின் வைஷ்ணவ் கூறியதாவது, பிரதமர் நரேந்திர ம... மேலும் பார்க்க

24 தலித் மக்கள் கொல்லப்பட்ட வழக்கு: 44 ஆண்டுகளுக்குப் பின் 3 பேருக்கு மரண தண்டனை விதிப்பு!

உ.பி.யில் தலித் சமூகத்தைச் சேர்ந்த 24 பேர் கொல்லப்பட்ட வழக்கில் 44 ஆண்டுகளுக்குப் பின் குற்றவாளிகளுக்கு மரண தண்டனை விதிக்கப்பட்டுள்ளது.உத்தரப் பிரதேசத்தின் தெஹுலி கிராமத்தில் 1981 ஆம் ஆண்டு நவம்பர் 18... மேலும் பார்க்க

பிற்படுத்தப்பட்ட வகுப்பைச் சேர்ந்தவர் என்பதால் லாலுவை குறிவைக்கும் பாஜக: பிரபுநாத் யாதவ்

ஐஆர்சிடிசி நிலம், வேலை வழக்கில் அமலாக்கத்துறை தனது விசாரணையைத் தீவிரப்படுத்தியுள்ள நிலையில், பிகார் முன்னாள் முதல்வர் ராப்ரி தேவியின் சகோதரர் பிரபுநாத் யாதவ் பாஜக தலைமையிலான மத்திய அரசைக் கடுமையாகச் ச... மேலும் பார்க்க

நகைக் கடன்: ரிசர்வ் வங்கியின் புதிய முடிவால் மக்கள் அதிர்ச்சி!

வங்கிகளில் நகைக் கடன்களில் கால அவகாசம் முடியும்போது, வட்டி மட்டும் செலுத்தி திருப்பி வைக்கும் நடைமுறையை மாற்றி, புதிய விதிமுறையை ரிசர்வ் வங்கி திட்டமிட்டுள்ளது.ரிசர்வ் வங்கியின் தற்போதைய விதிமுறையின்ப... மேலும் பார்க்க

இந்தியாவிற்கு கடத்தி வரப்பட்ட 88 கிலோ தங்கம் பறிமுதல்!

குஜராத்தில் உள்ள குடியிருப்பில் நடத்தப்பட்ட சோதனையில் 88 கிலோ தங்கம் பறிமுதல் செய்யப்பட்டது. அகமதாபாத்தின் பல்தி பகுதியி்ல் உள்ள குடியிருப்பில் பங்குத் தரகரான மகேந்திர ஷாவின் மகன் மேக் ஷா என்பவரது வீட... மேலும் பார்க்க

அரசியல் கட்சியைச் சேர்ந்தவர்கள் மீதான வழக்குகள்!

கடந்த 10 ஆண்டுகளில் (2024 - 25) அரசியல் கட்சிகளைச் சேர்ந்த 193 பேர் மீது அமலாக்கத் துறை வழக்குப்பதிவு செய்திருந்தாலும், அவர்களில் 2 பேர் மீதான வழக்குகளில் மட்டுமே குற்றம் நிரூபிக்கப்பட்டு, தண்டனை வழங்... மேலும் பார்க்க