“அநாகரிகத்தின் அடையாளமே ஒன்றிய பா.ஜ.க அரசுதான்...” என்ற முதல்வர் ஸ்டாலினின் கருத...
கட்டாய ஹிந்தியை வெட்டிப் புதைப்போம்: மாநிலங்களவையில் வைகோ!
கட்டாய ஹிந்தியை வெட்டிப் புதைப்போம் என்று மாநிலங்களவையில் மதிமுக பொதுச் செயலாளர் வைகோ முழக்கமிட்டார்.
நாடாளுமன்ற பட்ஜெட் கூட்டத்தொடரின் இரண்டாவது அமர்வு நடைபெற்று வருகின்றன. மாநிலங்களவை கூட்டத்தில் மணிப்பூர் விவகாரம் குறித்து திங்கள்கிழமை நடைபெற்ற விவாதத்தில் கலந்துகொண்டு வைகோ பேசினார்.
இதையும் படிக்க : பிஎம் என்றால் ’பிக்னிக் மினிஸ்டர்’: மோடியை விமர்சித்த வைகோ!
அப்போது பிரதமர் நரேந்திர மோடியை பிக்னிக் மினிஸ்டர் என்று கடுமையாக விமர்சித்த வைகோவுக்கு ஆளுங்கட்சி எம்பிக்கள் எதிர்ப்பு தெரிவித்த நிலையில், நான் அண்ணாவின் வழிவந்தவன் என்று வைகோ பதிலளித்தார்.
மேலும், ஹிந்தி திணிப்பு குறித்து பேசிய வைகோ, ’எங்கள் வாழ்வும் எங்கள் வளமும் மங்காத தமிழென்று சங்கே முழங்கு. எப்பக்கம் வந்து புகுந்துவிடும், ஹிந்தி எத்தனைப் பட்டாளம் கூட்டிவரும். கன்னங் கிழிபட நேரும், கட்டாய ஹிந்தியை வெட்டிப் புதைப்போம்' என்பது எங்கள் ஹிந்தி எதிர்ப்புப் போராட்டத்தின் போர் முழக்கம் என்றார்.
மேலும் பேசிய அவர், புதிய கல்விக் கொள்கையை குப்பைத் தொட்டியில் வீச வேண்டும். இந்த கொள்கையை நாங்கள் எதிர்கிறோம். முதல்வர் மு.க. ஸ்டாலின் தலைமையிலான திராவிட மாடல் அரசு, புதிய கல்விக் கொள்கையை ஒருபோதும் ஏற்காது என்றார்.