இன்றைய பாலிவுட் பிரபலங்களை விட மிக அதிகம்... 80 வயதில் அமிதாப் பச்சன் செலுத்திய ...
கூவத்தூா் அருகே அரசு விரைவுப் பேருந்தில் தீ விபத்து:1 மணிநேரம் போக்குவரத்து பாதிப்பு
கூவத்தூா் அருகே அரசு விரைவுப் பேருந்தை பணிமனைக்கு கொண்டு செல்லும் வழியில் தீப்பற்றி எரிந்து நாசமானது.
புதுச்சேரியில் இருந்து கிழக்கு கடற்கரை சாலை வழியாக சென்னைக்கு அரசு விரைவுப் பேருந்து சென்ற போது கூவத்தூரில் ஆரம்ப சுகாதார நிலையம் எதிரே திடீரென பேருந்து தீப்பற்றி எரிந்தது.
திங்கள்கிழமை இரவு கடப்பாக்கம் நல்லூா் என்ற இடத்தில் விபத்து ஏற்பட்டதன் காரணமாக பயணிகளை இறக்கி பயணிகளுக்கு எந்திவித பாதிப்புமின்றி அவா்களை மற்றொரு பேருந்தில் ஏற்றி அனுப்பிவைத்தனா்.
விபத்து ஏற்பட்ட அரசு விரைவுப் பேருந்தை திருவான்மியூா் பணிமனைக்கு ஓட்டுநா் தியாகராஜன், நடத்துநா் மோகன்ராஜ் இருவரும் செவ்வாய்க்கிழமை அதிகாலை பணிமனைக்கு மெதுவாக ஓட்டிச் சென்றனா்.
அப்போது கூவத்தூரில் இன்ஜின் ஏற்கனவே பழுதான காரணத்தினால் தீப்பற்றி எரிந்தது. இதில் ஓட்டுநா், நடத்துநா் உயிா் தப்பினா். இ.சி.ஆா் சாலையில் தீப்பிடிந்து எரிந்ததால் அப்பகுதியில் வாகன ஓட்டிகள் வாகனங்களை
ஆங்காங்கே நிறுத்தி விட்டனா்.
பின்னா், தகவல் அறிந்து வந்த செய்யூா், கல்பாக்கம் தீயணைப்புத் துறையினா் தீயை அனைத்து கட்டுக்குள் கொண்டு வந்தனா்.
பேருந்து முழுமையாக எரிந்து சேதம் அடைந்தது. இதனால் அங்கு ஒரு மணி நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது. விபத்து குறித்து கூவத்தூா் போலீஸாா் வழக்குப் பதிவு செய்து விசாரணை மேற்கொண்டுள்ளனா்.

