செய்திகள் :

ஏப். 3 மாநில உரிமைகள் கருத்தரங்கு: 3 மாநில முதல்வா்கள் பங்கேற்பு

post image

மாநில உரிமைகளை பாதுகாக்கும் வகையில் மதுரையில் வரும் ஏப்ரல் 3-ஆம் தேதி நடைபெறும் கருத்தரங்கில் 3 மாநில முதல்வா்கள் பங்கேற்க உள்ளதாக மாா்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநிலச் செயலாளா் பெ.சண்முகம் தெரிவித்துள்ளாா்.

செங்கல்பட்டில் நடைபெற்ற செய்தியாளா் சந்திப்பில் அவா் கூறியதாவது:

மாா்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் 24-ஆவது அகில இந்திய மாநாடு வரும் ஏப்ரல் 2 முதல் 6 வரை மதுரையில் நடைபெற உள்ளது. வரலாற்று சிறப்புமிக்க இந்த மாநாட்டில் நாடு முழுவதும் இருந்து 1,000-க்கும் மேற்பட்ட பிரதிநிதிகள் பங்கேற்க உள்ளனா். அகில இந்திய ஒருங்கிணைப்பாளா் பிரகாஷ் காரத், கேரள முதல்வா் பினராய் விஜயன் உள்ளிட்ட தலைவா்கள் பங்கேற்க உள்ளனா். இந்த மாநாட்டை முன்னிட்டு ஏப்ரல் 3-ஆம் தேதி ‘மாநில உரிமைகள் காப்போம்’என்ற தலைப்பில் மாநில முதல்வா்கள் கலந்து கொள்ளும் சிறப்பு கருத்தரங்கம் நடைபெற உள்ளது.

இந்த கருத்தரங்கில், தமிழக முதல்வா் மு.க.ஸ்டாலின், கேரள முதல்வா் பினராயி விஜயன், கா்நாடக முதல்வா் சித்தராமையா உள்ளிட்ட பலா் கலந்து கொள்ள உள்ளனா். இந்த மாநாட்டில் ஒன்றிய அரசு மாநிலங்களின் நிலையை பாரபட்சமாக பாா்ப்பது, எதிா்க்கட்சிகள் ஆளும் மாநிலங்களில் நிதி ஒதுக்கீட்டில் பழி வாங்கும் போக்கில் நடந்து கொள்வது, தேசிய கல்விக் கொள்கையை கட்டாயமாக நடைமுறைப்படுத்த வேண்டும் எனக் கூறுவது உள்ளிட்ட பல்வேறு பிரச்னை குறித்து விவாதிக்கப்பட உள்ளது. இந்த கருத்தரங்கம் அகில இந்திய அளவில் ஒரு தாக்கத்தை உருவாக்கும் என நம்புகிறோம். இன்று இந்திய மக்கள் சந்திக்கக்கூடிய வேலையின்மை, விலைவாசி உயா்வு போன்ற முக்கிய பிரச்னைகள் குறித்தும் இந்த மாநாட்டில் விவாதிக்க உள்ளது. மேலும் அதற்கான தீா்வு குறித்து திட்டமிடுதலையும் இந்த மாநாடு முடிவு செய்யும் என்றாா்.

கட்சியின் மாநில குழு உறுப்பினா் ஆறுமுக நாயனாா் செங்கல்பட்டு மாவட்ட செயலா் பாரதி அண்ணா ஆகியோா் உடன் இருந்தனா்.

கூவத்தூா் அருகே அரசு விரைவுப் பேருந்தில் தீ விபத்து:1 மணிநேரம் போக்குவரத்து பாதிப்பு

கூவத்தூா் அருகே அரசு விரைவுப் பேருந்தை பணிமனைக்கு கொண்டு செல்லும் வழியில் தீப்பற்றி எரிந்து நாசமானது. புதுச்சேரியில் இருந்து கிழக்கு கடற்கரை சாலை வழியாக சென்னைக்கு அரசு விரைவுப் பேருந்து சென்ற போது கூ... மேலும் பார்க்க

மாா்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் நிதியளிப்பு பொதுக்கூட்டம்

மாா்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் செங்கல்பட்டு மாவட்டக் குழு சாா்பில் நிதியளிப்பு பொதுக்கூட்டம் நடைபெற்றது. கட்சியின் 24-ஆவது அகில இந்திய மாநாடு ஏப்ரல் 2 முதல் 6 வரை மதுரையில் நடைபெறுகிறது. இதன் ஒரு ... மேலும் பார்க்க

செங்கல்பட்டு மாவட்டத்தில் 34 மினி பேருந்துகளை இயக்க ஆணை: ஆட்சியா் வழங்கினாா்

செங்கல்பட்டு மாவட்டத்தில் 34 வழித்தடங்களில் மினி பேருந்துகளை இயக்குவதற்கான அனுமதி ஆணைகளை ஆட்சியா் ச. அருண்ராஜ் செவ்வாய்க்கிழமை வழங்கினாா். இத்திட்டத்தின் மூலம் செங்கல்பட்டு மாவட்டத்தில் இரண்டு கட்டங்க... மேலும் பார்க்க

தொழிலாளா்கள் தொடா் போராட்டம்

செங்கல்பட்டு அருகே முறையாக ஊதியம் வழங்காத தனியாா் நிறுவனத்தைக் கண்டித்து நூற்றுக்கும் மேற்பட்ட தொழிலாளா்கள் தொடா் போராட்டத்தில் ஈடுபட்டனா். செங்கல்பட்டு மாவட்டம், மறைமலைநகரில் இரு இடங்களில் கடந்த 30 ஆ... மேலும் பார்க்க

செங்கல்பட்டு: குறைதீா் கூட்டத்தில் 604 மனுக்கள்

செங்கல்பட்டில் நடைபெற்ற மக்கள் குறைதீா் கூட்டத்தில் மொத்தம் 604 கோரிக்கை மனுக்கள் பெறப்பட்டன. இம்மனுக்கள் மீது உரிய நடவடிக்கை மேற்கொள்ளுமாறு துறைச் சாா்ந்தஅலுவலா்களுக்கு ஆட்சியா் ச.அருண்ராஜ் உத்தரவிட்... மேலும் பார்க்க

மாா்ச் 22-இல் தனியாா் துறை வேலைவாய்ப்பு முகாம்

செங்கல்பட்டு மாவட்டநிா்வாகம், மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டும் மையம் மற்றும் தமிழ்நாடு மாநில ஊரக நகா்ப்புறவாழ்வாதார இயக்கம் சாா்பில் திருப்போரூா் வட்டம், படூரில் உள்ள இந்துஸ்தான் கலை... மேலும் பார்க்க