செய்திகள் :

விழுப்புரம்: `விக்கிரவாண்டி தொகுதியில் திமுக வெற்றி செல்லும்!’ – சென்னை உயர் நீதிமன்றம்

post image

விழுப்புரம் மாவட்டம், விக்கிரவாண்டித் தொகுதியின் எம்.எல்.ஏ-வாக இருந்த புகழேந்தி உயிரிழந்ததையடுத்து, 2024 ஜூலை 10-ம் தேதி அங்கு இடைத்தேர்தலை அறிவித்தது தேர்தல் ஆணையம். தி.மு.க சார்பில் அன்னியூர் சிவா, பா.ம.க சார்பில் சி.அன்புமணி, நாம் தமிழர் கட்சி சார்பில் அபிநயா உள்ளிட்டவர்கள் போட்டியிட்டனர். அந்த தேர்தலில் 1,24,053 லட்சம் வாக்குகள் பெற்ற அன்னியூர் சிவா, 67,757 வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றிபெற்றிருந்தார். ஆனால் விக்கிரவாண்டி தொகுதியில் வெற்றிபெற்ற தி.மு.க வேட்பாளர் அன்னியூர் சிவாவின் வெற்றி செல்லாது என்று அறிவிக்கக் கோரி, தேசிய மக்கள் சக்தி கட்சியின் வேட்பாளர் ராஜமாணிக்கம் என்பவர் சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடுத்திருந்தார்.

திமுக எம்.எல்.ஏ அன்னியூர் சிவா

அதில், விக்கிரவாண்டி இடைத்தேர்தலில் போட்டியிட தான் மனு தாக்கல் செய்திருந்ததாகவும், ஆனால் அந்த மனுவை முறையாக பரிசீலிக்காமல் தேர்தல் ஆணையம் நிராகரித்துவிட்டதாகவும் குறிப்பிட்டிருந்தார்.

அதையடுத்து தனக்கு எதிரான அந்த வழக்கை ரத்து செய்ய வேண்டும் என்று எம்.எல்.ஏ அன்னியூர் சிவா மனு தாக்கல் செய்திருந்தார். இந்த வழக்கை விசாரித்த சென்னை உயர் நீதிமன்ற நீதிபதி இளந்திரையன், அன்னியூர் சிவாவின் மனுவை ஏற்றுக் கொண்டு ராஜமாணிக்கத்தின் மனுவை தள்ளுபடி செய்தார். இதன் மூலம் விக்கிரவாண்டி தொகுதியில் தி.மு.க-வின் வெற்றி மீண்டும் உறுதி செய்யப்பட்டிருக்கிறது.

Vikatan WhatsApp Channel

இணைந்திருங்கள் விகடனோடு வாட்ஸ்அப்பிலும்... CLICK BELOW LINK

https://bit.ly/VikatanWAChannel

தென்காசி: அரசு அலுவலகத்தில் குப்பையில் வீசப்பட்ட முன்னாள் முதல்வர் புகைப்படம்; அதிமுக-வினர் கண்டனம்!

தென்காசி நகரப் பகுதியில் புது பஸ்டாண்ட் செல்லும் வழியில் வருவாய் கோட்டாட்சியர் அலுவலகம் செயல்பட்டு வருகிறது. இந்த அலுவலகத்தில் முன்னாள், இந்நாள் தமிழக முதல்வர்களின் போட்டோக்கள் வைக்கப்பட்டு பராமரிக்கப... மேலும் பார்க்க

ஆரோவில்: `மரங்களை வெட்டி வளர்ச்சி பணிகளை செய்யலாம்!'- பசுமை தீர்பாயம் உத்தரவை ரத்துசெய்த நீதிமன்றம்

புதுச்சேரியை ஒட்டி விழுப்புரம் மாவட்டத்தில் அமைந்திருக்கிறது ஆரோவில். மனித இனத்தின் ஒற்றுமையை பரிசோதித்து பார்ப்பதற்காக, மறைந்த அரவிந்த அன்னை அவர்களால் தோற்றுவிக்கப்பட்டதுதான் ஆரோவில் சர்வதேச நகரம். 5... மேலும் பார்க்க

புதுச்சேரி: ``கடைகளின் பெயர் பலகைகளில் தமிழ் கட்டாயம்" - முதலமைச்சர் ரங்கசாமி

புதுச்சேரி சட்டப்பேரவையின் 2025-26 பட்ஜெட் கூட்டத்தொடர் கடந்த மார்ச் 10-ம் தேதி தொடங்கியது. 12-ம் தேதி முதல்வர் ரங்கசாமி பட்ஜெட் தாக்கல் செய்த நிலையில், அதன் மீதான பொது விவாதம் நடைபெற்று வருகிறது. அதி... மேலும் பார்க்க

Israel - Gaza : மீண்டும் போரை தொடங்கியிருக்கும் இஸ்ரேல்... காஸா மீது தாக்குதல்; 300 பேர் பலி

ஜனவரி மாதம் தொடங்கிய போர்நிறுத்த ஒப்பந்தத்தை மீறி இன்று அதிகாலை முதல் காஸா முழுவதும் இஸ்ரேல் வான்வழித் தாக்குதல் நடத்தியிருக்கிறது. இதில் குழந்தைகள் உட்பட 300-க்கும் மேற்பட்டோர் உயிரிழந்திருக்கின்றனர்... மேலும் பார்க்க