இறைச்சிக்காக கருவுற்ற யானை கொலை?
அஸ்ஸாமில் கருவுற்ற யானையின் சடலத்தை வனத்துறையினர் மீட்டுள்ளனர்.
அஸ்ஸாம் மாநிலம் டோபடோலி கிராமத்துக்கு அருகே பாதுகாக்கப்பட்ட வனப்பகுதிக்குள் சிதைந்த நிலையில், கருவுற்ற யானையின் சடலத்தை வனத்துறையினர் மீட்டுள்ளனர்.
இந்த சம்பவம் குறித்து வனத்துறை அதிகாரிகள் கூறியதாவது, கருவுற்ற யானை சுமார் 15 நாள்களுக்கு முன்னர் கொல்லப்பட்டு, அதன் ஒருபகுதி இறைச்சியையும் மர்ம நபர்கள் வெட்டி எடுத்துச் சென்றுள்ளனர். இந்த சம்பவத்தில் ஈடுபட்டவர்கள் மேகாலயாவில் இருந்து வந்திருக்கலாம் என்று சந்தேகிக்கப்படுகிறது.
இது தொடர்பாக, வழக்குப்பதிவு செய்யப்பட்டு, விசாரணை நடைபெற்று வருவதாகத் தெரிவித்தனர்.
இதையும் படிக்க:2024-ல் பசிபிக் பெருங்கடலில் மாயமான மீனவர் உயிருடன் மீட்பு!