ரூ.6,848 கோடி மதிப்பிலான எரிபொருளை அமெரிக்காவுக்கு ஏற்றுமதி செய்த ரிலையன்ஸ்!
புதுதில்லி: முகேஷ் அம்பானியின் ரிலையன்ஸ் இண்டஸ்ட்ரீஸ் லிமிடெட் கடந்த வருடத்தில் ரஷ்ய கச்சா எண்ணெயிலிருந்து பிரித்து எடுக்கப்பட்ட எரிபொருளை அமெரிக்காவிற்கு ஏற்றுமதி செய்ததில் ரூ.6,848 கோடி வருவாய் ஈட்டியுள்ளது என்று ஐரோப்பிய நிறுவனம் தனது அறிக்கையில் தெரிவித்துள்ளது.
ஜனவரி 2024 முதல் ஜனவரி 2025 இறுதி வரை, ரஷ்ய கச்சா எண்ணெயை பதப்படுத்த, இந்தியா மற்றும் துருக்கியில் உள்ள ஆறு சுத்திகரிப்பு நிலையங்களிலிருந்து அமெரிக்கா ரூ.26,489 கோடி சுத்திகரிக்கப்பட்ட எண்ணெயை இறக்குமதி செய்தது. இதில் ரூ.12,298 கோடி அளவு பெறுமான ரஷ்ய கச்சா எண்ணெய் சுத்திகரிக்கப்பட்டது என்று 'சிஆர்இஏ' தனது அறிக்கையில் தெரிவித்தது.
ரிலையன்ஸின் இரட்டை சுத்திகரிப்பு நிலையங்கள் அமைந்துள்ள ஜாம்நகரிலிருந்து பெட்ரோல் மற்றும் டீசல் ஆகிய எரிபொருட்களை அமெரிக்கா இறக்குமதி செய்தது ரூ.18,919 கோடி. இதில் ரூ.6,848 கோடி பெறுமான ரஷ்ய கச்சா எண்ணெய் சுத்திகரிக்கப்பட்டதாக மதிப்பிடப்பட்டது.
பிப்ரவரி 2022ல் உக்ரைன் மீதான படையெடுப்பைத் தொடர்ந்து ரஷ்யா மீதான மேற்கத்திய மற்றும் அமெரிக்க பொருளாதாரத் தடைகள் விகித்த நிலையில், ரஷ்ய கச்சா எண்ணெயை வாங்குவதையோ அல்லது பயன்படுத்துவதையோ மற்றும் அதிலிருந்து பெறப்பட்டும் டீசல் உள்ளிட்ட எரிபொருளை ஏற்றுமதி செய்ய தடை விதிக்கப்படவில்லை. இதனால் ஐரோப்பாவும், அமெரிக்காவும், இந்தியா போன்ற மூன்றாம் உலக நாடுகளிலிருந்து ரஷ்ய கச்சா எண்ணெயை சுத்திகரிப்பு செய்து அதன் மூலம் பெறப்படும் எரிபொருளை இறக்குமதி செய்ததது.
குஜராத்தில் உள்ள வாடினார், அங்கு ரஷ்யாவின் ரோஸ்நெஃப்ட்டை தளமாகக் கொண்ட நயாரா எனர்ஜி ஆண்டுக்கு 20 மில்லியன் டன் சுத்திகரிப்பு ஆலையைக் கொண்டுள்ளது. ஜனவரி 2024 முதல் ஜனவரி 2025 வரை ரூ.1,740 கோடி மதிப்புள்ள எரிபொருளை அமெரிக்காவிற்கு ஏற்றுமதி செய்தது. இதில் ரூ.1,173 கோடி பெறுமான ரஷ்ய கச்சா எண்ணெய் சுத்திகரிக்கப்பட்டதாக மதிப்பிடப்பட்டுள்ளது.
மங்களூர் சுத்திகரிப்பு மற்றும் பெட்ரோ கெமிக்கல்ஸ் லிமிடெட் யூனிட்டிலிருந்து ரூ.397 கோடி மதிப்புள்ள எரிபொருளை அமெரிக்காவிற்கு ஏற்றுமதி செய்தது. இதில் ரூ.208 கோடி பெறுமான ரஷ்ய கச்சா எண்ணெய் சுத்திகரிக்கப்பட்டதாக தெரிவிக்கப்பட்டது.
துருக்கியின் மூன்று சுத்திகரிப்பு நிலையங்களில் மொத்தம் ரூ.5,828 கோடி மதிப்புள்ள எரிபொருளை அமெரிக்காவிற்கு ஏற்றுமதி செய்தது. இதில் ரூ.5,155 கோடி பெறுமான ரஷ்ய கச்சா எண்ணெயிலிருந்து சுத்திகரிக்கப்பட்டதாக தெரிவிக்கப்பட்டது.
இந்தியா மற்றும் துருக்கியிலிருந்து அமெரிக்காவுக்கு இறக்குமதி செய்யப்பட்ட எரிபொருள் உள்ளிட்டவையால் ரஷ்யாவுக்கு ரூ.6,489 கோடி வரி வருவாய் கிடைத்தது. ரஷ்ய கச்சா எண்ணெயை வாங்குவதற்கும், பயன்படுத்துவதற்கும், அதிலிருந்து பெறப்படடும் டீசல் ஆகி எரிபொருட்களை ஏற்றுமதி செய்வதற்கும் எந்த தடையும் இல்லை என்றாலும், ஐரோப்பிய ஒன்றியம் மற்றும் ஆஸ்திரேலியா, டிசம்பர் 5, 2022 முதல் பீப்பாய்க்கு 60 டாலர் என்ற விலை வரம்பை நிர்ணயித்தது. இது மாஸ்கோவின் வருவாயைக் கட்டுப்படுத்தும் அதே நேரத்தில் சந்தை விநியோகத்தை வைத்திருக்க உதவும்.
பிப்ரவரி 2022ல் நடைபெற்ற உக்ரைன் மீதான ரஷ்யாவின் படையெடுப்புக்காக எண்ணெய் வருவாயை பறிப்பதன் மூலம் ரஷ்யாவை தண்டிப்பதை நோக்கமாகக் கொண்ட அதே நேரத்தில் ரஷ்ய எண்ணெய் உலகளாவிய சந்தைகளுக்கு வருவதை நிறுத்தப்பட்டால் ஏற்படக்கூடிய விலைகளின் அதிகரிப்பைத் தவிர்பதற்கும் இது வழிவகுக்கும்.