"ரஜினி, சிரஞ்சீவி, சூர்யா படங்கள அங்க பார்க்குறோம்; ஆனா எங்க படங்கள இங்க..." - ச...
ஊட்டி: தரிசு நிலம் டு ஆர்கானிக் கூட்டு வேளாண்மைத் தோட்டம்; அசத்தும் ஆனைப்பள்ளம் பழங்குடிகள்!
ஆங்கிலேயர்களால் நீலகிரியில் அறிமுகப்படுத்தப்பட்ட இங்கிலீஷ் வெஜிடபிள்ஸ் எனப்படும் மேலை நாட்டுக் காய்கறி சாகுபடியில் அதிக எண்ணிக்கையிலான விவசாயிகள் ஈடுபட்டு வருகின்றனர்.
ஆறுகளின் ஊற்றுக்கண்ணாக இருந்து வரும் நீலகிரி மலையில் மேற்கொள்ளப்படும் மலை காய்கறி சாகுபடிக்கு அளவுக்கு அதிகமாக ரசாயன உரம், மருந்தைப் பயன்படுத்தி வருவதால் சுற்றுச்சூழலில் கடுமையான பாதிப்புகள் ஏற்பட்டு வருவதை ஆய்வுகள் மூலம் கண்டறிந்து வருகின்றனர்.
ரசாயன பயன்பாட்டைக் குறைத்து இயற்கை வேளாண்மை பரப்பளவை அதிகரிக்கும் விதமாக நீலகிரியை ஆர்கானிக் மாவட்டமாக அறிவித்து பல்வேறு திட்டங்களை வகுத்து வருகின்றனர்.

இதன் ஒரு பகுதியாகப் பழங்குடி கிராமங்களில் ஆர்கானிக் கூட்டு வேளாண்மைத் தோட்டங்களை அந்த மக்களின் பங்களிப்புடன் தமிழ்நாடு அரசின் தோட்டக்கலைத்துறை உருவாக்கி வருகிறது.
அரசு மூலம் விதைகள், வேளாண் இடுபொருட்கள், நிழல் வலைகள் போன்றவை இலவசமாக வழங்கப்படுகின்றன. கிராமத்திலிருக்கும் பொது இடத்தைத் தேர்வு செய்து தோட்டமாக மாற்றிப் பயிர் செய்யலாம். சாகுபடி செய்யப்படும் பயிர்களை மக்களே அறுவடை செய்து தங்களுக்குள் பங்கிட்டுக் கொள்ளலாம்.
ஆர்கானிக் முறையில் பழங்குடி மக்கள் கூட்டாக உற்பத்தி செய்த முள்ளங்கி, ப்ரோக்கோலி, கத்தரிக்காய் மற்றும் கீரைகளை அறுவடை செய்து பகிர்ந்ததை விழாவாகக் கொண்டாடி மகிழ்ந்துள்ளனர்.

இது குறித்துத் தெரிவித்த தோட்டக்கலைத்துறை அதிகாரிகள், "பழங்குடிப் பெண்களிடம் அண்மைக் காலமாக ஊட்டச்சத்துக் குறைபாடு அதிகமாகக் காணப்படுகிறது. இதனைப் போக்கும் விதமாகவும் மீண்டும் இயற்கை வேளாண்மையை நோக்கி இந்த மக்கள் திரும்ப வேண்டும் எனவும் திட்டம் கொண்டுவரப்பட்டது.
ஆனைப் பள்ளம் கிராமத்திலிருந்த தரிசு நிலத்தைச் சுத்தம் செய்து, கூட்டு வேளாண்மைத் தோட்டமாக மாற்றப்பட்டது. தற்போது பல்வேறு காய்கறிகளை ஆர்கானிக் முறையில் சாகுபடி செய்து உட்கொண்டு வருகின்றனர். கிராம ஒற்றுமை, தற்சார்பு, சமச்சீர் ஊட்டச்சத்து போன்ற பல பலன்களைக் கண்கூடாகப் பார்க்க முடிகிறது" என்றனர்.
Junior Vikatan-ன் பிரத்யேக Whatsapp Group...
இணைவதற்கு இங்கே க்ளிக் செய்யவும்https://bit.ly/3OITqxs
வணக்கம்,
BIG BREAKINGS முதல்... அரசியல், சமூகம், க்ரைம், சினிமா என அனைத்து ஏரியாக்களின் அசராத அப்டேட்ஸ், ஆழமான கட்டுரைகள்.
ஜூனியர் விகடன் இதழ் மற்றும் டிஜிட்டலில் கவனம் ஈர்க்கும் கட்டுரைகள் இங்கே உடனுக்குடன்... https://bit.ly/3OITqxs