செய்திகள் :

ரூ.1 லட்சம் செலவு செய்தும் வீண் - டிராக்டர் மூலம் தக்காளியை அழித்த திருப்பூர் விவசாயி

post image

திருப்பூர் மாவட்டம் பல்லடத்தை அடுத்த அல்லாளபுரம் பகுதியைச் சேர்ந்தவர் செந்தில்குமார். விவசாயியான இவருக்குச் சொந்தமாக அதே கிராமத்தில் 2 ஏக்கர் நிலம் உள்ளது. இந்த நிலத்தில் தக்காளி பயிரிட்டிருந்தார் செந்தில்குமார். கடந்த 15 நாள்களாக தக்காளிகளை அறுவடை செய்து, திருப்பூர் தென்னம்பாளையம் காய்கறிச் சந்தைக்கு கொண்டு விற்பனை செய்துவந்துள்ளார்.

கடந்த 2 நாள்களாக 15 கிலோ கொண்ட பெட்டி ரூ. 100 விற்பனையானதால் தக்காளி பயிரிட்ட விவசாயிகள் பலரும் பரிதவிப்புக்கு ஆளாகினர். தக்காளி பறிப்பு கூலி, சந்தைக்கு கொண்டு செல்லும் வாடகை உள்ளிட்டவைகளுக்கு கூட கட்டுப்பாடியாகமல் இருந்தது. இந்நிலையில், செந்தில்குமார் தான் இரண்டு ஏக்கரில் பயிரிட்டிருந்த தக்காளி முழுவதையும் டிராக்டர் மூலம் அழித்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

தக்காளி

உச்சத்துக்கும் படுபாதாளத்துக்கும்!

இதுகுறித்து செந்தில்குமாரிடம் கேட்டபோது, "எங்கள் சுற்றுவட்டாரப் பகுதியில் தக்காளி, சின்னவெங்காயம் சுமார் ஆயிரம் ஏக்கர் பரப்பளவில் பயிரிடப்படுகிறது. ஆண்டுதோறும் தக்காளிக்கு விலையில்லாத பிரச்னை தொடர்ந்து கொண்டேதான் இருக்கிறது.

திடீரென்று தக்காளி விலை உச்சத்துக்கு செல்வதும், திடீரென்று படுபாதாளத்துக்கும் செல்கிறது. நிலையான விலை இல்லாததால், தக்காளி பயிரிடும் விவசாயிகள் பலர் இதை விட்டு வெளியேறிவிட்டனர். ஒரு ஏக்கருக்கு ரூ.50 ஆயிரம் வீதம் இரண்டு ஏக்கருக்கு ரூ.1 லட்சம் செலவு செய்து தக்காளி பயிரிட்டிருந்தேன். அழிப்பதற்காக தக்காளி விவசாயம் செய்யவில்லை. இரண்டு மாதகாலமாக தக்காளி பயிரைக் காப்பாற்ற பல சிரமங்களைச் சந்தித்து வளர்த்து வந்தேன்.

அழிப்பு

தற்போது, அறுவடை செய்யும் நிலையில், வெளிமாநில தக்காளி வரத்தால் இங்கு விளையும் தக்காளி விலை போகவில்லை. 15 கிலோ கொண்ட பெட்டி ரூ. 100 விற்பனையானகிறது. பறிப்பு கூலி, வண்டி வாடகை, இடைத்தரகர்கள் கமிஷன் போக ஒரு கிலோவுக்கு ரூ.1.50 பைசாதான் மிஞ்சுகிறது. இதனால், கடும் நஷ்டத்தை சந்தித்து வருகிறேன். இதனால், எங்கள் கிராம மக்களுக்கு தோட்டத்தில் விளைந்த தக்காளிகளை இலவசமாக அளித்தேன். மாடுகளை தோட்டத்தில் மேய்ச்சலுக்கு விட்டுவிட்டேன்.

மீதமுள்ள தக்காளியை டிராக்டர் மூலம் அழித்துவிட்டேன். தொடர்ந்து விலை வீழ்ச்சி ஏற்படாமல் இருக்க, விவசாயிகளை அரசு பாதுகாக்கும் வகையில் தக்காளிக்கென்று குறைந்தபட்ச விலையை நிர்ணயம் செய்து, பாதுகாக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்” என்றார்.

கடந்த 3 ஆண்டுகளுக்கு முன்பே இதே பகுதியைச் சேர்ந்த பரமசிவம் என்ற விவசாயி தக்காளிக்கு போதிய விலை இல்லாதநிலையில் தனது தோட்டத்தில் டிராக்டர் மூலம் அழித்த சம்பவம்போல் மீண்டும் மற்றொரு சம்பவம் அரங்கேறியிருப்பது திருப்பூர் விவசாயிகள் மத்தியில் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.

Vikatan WhatsApp Channel

இணைந்திருங்கள் விகடனோடு வாட்ஸ்அப்பிலும்... CLICK BELOW LINK

https://bit.ly/VikatanWAChannel

Garlic: ரூ.600-லிருந்து 60-க்கு சரிந்த ஊட்டி மலை பூண்டு - காரணம் இதுதான்!

நீலகிரி மாவட்டத்தின் ஊட்டி மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகளில் கேரட், உருளைக்கிழங்கு பயிர்களுக்கு அடுத்தபடியாக பூண்டு சாகுபடியில் விவசாயிகள் அதிக ஆர்வம் காட்டி வருகின்றனர். ஊட்டியில் விளைவிக்கப்படும்... மேலும் பார்க்க

LIVE TN Budget 2025-26 : வேளான் பட்ஜெட் தாக்கல் செய்கிறார் அமைச்சர் MRK பன்னீர் செல்வம்!

இன்று வேளாண் பட்ஜெட் தாக்கல்!MRK பன்னீர் செல்வம்தமிழ்நாடு சட்டமன்றத்தில் நேற்று 2025-26-ம் ஆண்டுக்கான பொது பட்ஜெட் தாக்கல் செய்யப்பட்டது. இந்த பட்ஜெட்டை தாக்கல் செய்த நிதி அமைச்சர் தங்கம் தென்னரசு, சு... மேலும் பார்க்க

அமெரிக்காவில் பிரபலமாகும் `வாடகை கோழி சேவை' - என்ன காரணம் தெரியுமா?

அமெரிக்காவில் கோழிகளை வாடகைக்கு எடுத்து வளர்ப்பது என்பது பிரபலமாகி வருகிறது. ஏன் மக்கள் கோழிகளை வாடகைக்கு எடுத்து வளர்க்கிறார்கள். அதற்கு பின்னால் இருக்கும் காரணம் என்ன என்று இங்கு தெரிந்துகொள்ளலாம்.ம... மேலும் பார்க்க

Amul: "நெய், தயிரைத் தொடர்ந்து விரைவில் தமிழ்நாட்டில் பால் விற்பனை" - அமுல் நிறுவன எம்.டி பேட்டி

பசுமை விகடன் அக்ரி எக்ஸ்போ - 2025, திருச்சி மாநகரில் உள்ள கலையரங்கத்தில் கடந்த 7, 8 மற்றும் 9 ஆகிய மூன்று நாள்கள் மிகச் சிறப்பாக நடைபெற்றன. இந்த மாபெரும் வேளாண் கண்காட்சிக்கு சத்யம் அக்ரோ கிளினிக் மற்... மேலும் பார்க்க

பசுமை சந்தை!

வாசக விவசாயிகளே!விவசாய விளைபொருள்கள், கால்நடைகள், மீன்கள், பண்ணை உபகரணங்கள் போன்றவற்றை இங்கே நீங்கள் சந்தைப்படுத்தலாம். இயற்கை இடுபொருள்களான உரம், பூச்சிவிரட்டி தொடர்பான தகவல்கள் மற்றும் நிலம் விற்பது... மேலும் பார்க்க

திருச்சி: பசுமை விகடன் Agri Expo; 80 அரங்குகள்; கருத்தரங்கங்கள்... மாபெரும் வேளாண் கண்காட்சி!

பசுமை விகடன் நடத்தும் வேளாண் கண்காட்சி திருச்சி கலையரங்கத்தில் மார்ச் 7,8,9 ஆகிய மூன்று நாள்கள் நடைபெற உள்ளன. தமிழ்நாட்டின் அனைத்து மாவட்டங்களில் இருந்தும் ஆயிரக்கணக்கான விவசாயிகள் இல்லத்தரசிகள், வேளா... மேலும் பார்க்க