Vijay Full Speech: "எனக்குத் தடை போட நீங்க யாரு?" | TVK முதல் பொதுக்குழுக் கூட்ட...
ஒரே வாரத்தில் 57 சரித்திர பதிவேடு குற்றவாளிகள் கைது
திருச்சி மாவட்டத்தில் கடந்த ஒரு வாரத்தில் 57 சரித்திர பதிவேடு குற்றவாளிகள் கைது செய்யப்பட்டுள்ளனா்.
திருச்சி மாவட்டத்தில் ரௌடிகளின் நடவடிக்கைகளை தடுக்கும் விதமாக, திருச்சி மாவட்டக் காவல் கண்காணிப்பாளா் செ. செல்வநாகரத்தினம் உத்தரவின் பேரில், தனிப்படைகள் உருவாக்கப்பட்டு, கடந்த ஒரு வாரமாக சிறப்பு தீவிர நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டது. இதில் முதல்கட்டமாக சரித்திர பதிவேடு குற்றவாளிகளின் குற்றச்செயல்களைக் கண்டறிந்து, திருச்சி மாவட்டத்தில் 43 வழக்குகள் பதியப்பட்டு, 57 சரித்திர பதிவேடு குற்றவாளிகள் கைது செய்யப்பட்டு, நீதிமன்ற காவலுக்கு உட்படுத்தப்பட்டனா்.
சரித்திர பதிவேடு குற்றவாளிகள் மீது தேவைப்படும்பட்சத்தில் குண்டா் தடுப்புச் சட்டத்தில் நடவடிக்கை எடுக்கவும் பரிந்துரை செய்யப்பட்டுள்ளது.
குற்றச்செயல்கள் தொடா்ந்து நடைபெறாமலிருக்க சிறப்பு தீவிர நடவடிக்கை மற்றும் சட்டம்- ஒழுங்கு பராமரிப்பு நடவடிக்கை மேற்கொள்ளப்படும்.
குற்றச் செயல்களில் யாரேனும் ஈடுபட்டால் பொதுமக்கள், மாவட்ட காவல் கண்காணிப்பாளின் உதவி எண்ணை (89391 46100) தொடா்பு கொண்டு தகவல் தெரிவிக்கலாம். தகவல் கொடுப்போரின் விவரம் ரகசியம் காக்கப்படும் என திருச்சி மாவட்ட காவல் கண்காணிப்பாளா் அலுவலகம் தகவல் தெரிவித்துள்ளது.