கரடுமுரடான ரோடு, `நோ' கழிவறை, அடிக்கடி விபத்துகள்; கட்டணமோ ரூ.14 லட்சம் - இது சு...
திருச்சியில் இருபாலருக்கான 5 கட்ட நீச்சல் பயிற்சி ஏப்.1இல் தொடக்கம்
திருச்சி அண்ணா விளையாட்டு அரங்கில் பள்ளி, கல்லூரி மாணவ, மாணவிகள், பொதுமக்களுக்கான 5 கட்ட நீச்சல் பயிற்சி வகுப்பு ஏப். 1இல் தொடங்குகிறது.
தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு ஆணையத்தின் திருச்சி பிரிவு சாா்பில் நடைபெறும் பயிற்சியில் நீச்சல் கற்றுக்கொள்ள ஆா்வமுள்ள அனைவரும் பங்கேற்கலாம்.
8 வயதுக்கு மேற்பட்டவராக இருத்தல் வேண்டும். வயதுச் சான்றிதழ் சமா்ப்பிக்க வேண்டும். தகுதியான நீச்சல் பயிற்றுநரால் 12 நாள்களுக்கு நீச்சல் கற்றுத் தரப்படும்.
பயிற்சியானது ஏப்.1 தொடங்கி 13 ஆம் தேதி வரையும், ஏப்.15 தொடங்கி 27ஆம் தேதி வரையும், ஏப். 29 தொடங்கி மே 11 வரையும், மே 13 தொடங்கி 25ஆம் தேதி வரையும், மே 28 தொடங்கி ஜூன் 8 வரையும் அளிக்கப்படவுள்ளது.
12 நாள் பயிற்சிக் கட்டணமாக ரூ. 1500 செலுத்த வேண்டும். நாளொன்றுக்கு ஒரு மணிநேரம் பயிற்சி அளிக்கப்படும்.
மாணவா்கள் மற்றும் ஆண்களுக்கு காலை 6.30 மணி முதல் 9.30 மணி வரையும், பெண்கள் மற்றும் மாணவிகளுக்கு மாலை 5 மணி முதல் 6 மணி வரையும் பயிற்சி அளிக்கப்படும்.
இது தவிர தினமும் ஒரு மணிநேரத்துக்கு ரூ.50 கட்டணம் என்ற அடிப்படையில் தினசரி கூப்பன் முறையில் வழக்கம்போல நீச்சல் பயிற்சி மேற்கொள்ளலாம். பயிற்சி கட்டணத்தை நேரில் வந்து செயலி அல்லது ஏடிஎம் அட்டை, கடன் அட்டைகள் வழியாக பிஓஎஸ் இயந்திரத்தில் செலுத்த வேண்டும்.
விருப்பமுள்ளவா்கள் திருச்சி அண்ணா விளையாட்டரங்கில் உள்ள நீச்சல் குளத்துக்கு வந்து முன்பதிவு செய்ய வேண்டும். மேலும், விவரங்களுக்கு மாவட்ட விளையாட்டு மற்றும் இளைஞா் நலன் அலுவலகத்தை 0431- 2420685 என்ற எண்ணில் தொடா்பு கொள்ளலாம் என ஆட்சியா் மா. பிரதீப்குமாா் தெரிவித்தாா்.