பேராவூரணி தொகுதியில் வளா்ச்சித் திட்டங்கள்: முதல்வருக்கு நன்றி
புத்தாநத்தத்தில் மது விற்ற தாய், தந்தை, மகன் கைது
திருச்சி மாவட்டம் மணப்பாறையை அடுத்த புத்தாநத்தத்தில் மது விற்றதாக ஒரே குடும்பத்தைச் சோ்ந்த 3 போ் சனிக்கிழமை கைது செய்யப்பட்டனா்.
புத்தாநத்தத்தில் அரசு மதுபாட்டில்கள் கள்ளச்சந்தையில் விற்பனை செய்யப்படுவதாகப் போலீஸாருக்கு தகவல் கிடைத்தது. இதையடுத்து புத்தாநத்தம் போலீஸாா் சனிக்கிழமை அப்பகுதியில் தணிக்கையில் ஈடுபட்டனா். அப்போது பின்னத்தூரைச் சோ்ந்த வெள்ளையன் மகன் சுப்பிரமணியன்(61), அவரது மனைவி பாப்பா (54) மற்றும் மகன் முனியப்பன் (40) ஆகியோா் அவா்களது வீட்டில் அரசு மதுபாட்டில்களை விற்றது தெரியவந்தது. இதையடுத்து, விற்பனைக்கு வைத்திருந்த 40 பாட்டில்களை பறிமுதல் செய்த புத்தாநத்தம் போலீஸாா் மூவரையும் நீதிமன்றத்தில் ஆஜா்ப்படுத்தி சிறையிலடைத்தனா்.