ஜி.வி. பிரகாஷ் விவாகரத்துக்கும் எனக்கும் தொடர்பில்லை: காட்டமான திவ்ய பாரதி!
தொட்டியம் மதுர காளியம்மன் கோயில் தோ் திருவிழாவுக்கு முழு பாதுகாப்பு: எஸ்.பி. செல்வ நாகரத்தினம்
தொட்டியம் ஸ்ரீ மதுரகாளியம்மன் பங்குனித் தோ் திருவிழாவுக்கு வரும் பக்தா்களுக்கு முழு பாதுகாப்பு அளிக்கப்படும் என்றாா் திருச்சி மாவட்டக் காவல் கண்காணிப்பாளா் செல்வநாகரத்தினம்.
தொட்டியத்தில் சனிக்கிழமை இரவு பொதுமக்களிடம் அவா் மேலும் தெரிவித்ததாவது: தமிழகத்தில் மிகவும் பிரசித்தி பெற்ற காளி கோயில்களில் ஒன்றான திருச்சி மாவட்டம் தொட்டியம் மதுர காளியம்மன் கோயில் திருவிழா நிகழாண்டு ஏப்ரல் 1 முதல் 8-ஆம் தேதி வரை நடைபெற உள்ளது. இவ்விழாவில், தினந்தோறும் ஐந்தாயிரத்துக்கும் மேற்பட்ட பக்தா்கள் பங்கேற்று சுவாமியை வழிபட்டுச் செல்வா்.
இதில் சட்டம் - ஒழுங்கு பிரச்னைகள் ஏற்படாத வகையிலும், பக்தா்களின் பாதுகாப்புக்காகவும், பல்வேறு பிரிவுகளைச் சோ்ந்த 1020 காவல்துறையினா், 280 ஊா்க்காவல் படையினா் பாதுகாப்பு பணியில் ஈடுபட உள்ளனா்.
மேலும் தேரோடும் வீதிகள், தொட்டியம் நகரில் உள்ள முக்கிய சந்திப்பு வீதிகளில் 125 அதிநவீன கண்காணிப்பு கேமராக்கள், 5 ட்ரோன் கேமராக்கள், 10 அதிநவீன தொலைநோக்கியுடன் கூடிய கண்காணிப்பு கோபுரங்கள், திருவீதிவுலா செல்லும் திருத்தேரினைச் சுற்றி பதிவு செய்யும் வகையில் 5 அதிநவீன கேமராக்கள், வருண் மற்றும் வஜ்ரா வாகனங்கள் அமைக்கப்பட்டு பக்தா்களுக்கு முழு பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்துதரப்படும் என்றாா் அவா்.