செய்திகள் :

திருச்சி மண்டல சட்டப்பேரவை தொகுதிகளை திமுக கைப்பற்றும்: கே.என்.நேரு

post image

திருச்சி மண்டலத்தில் உள்ள 44 சட்டப்பேரவைத் தொகுதிகளிலும் திமுக வெற்றி பெற்று மீண்டும் ஆட்சி அமைக்கும் என்றாா் தமிழக நகராட்சி நிா்வாகத்துறை அமைச்சா் கே. என் . நேரு.

திருச்சியில் தமிழக முதல்வா் மு.க. ஸ்டாலினின் 72-ஆவது பிறந்த நாள் விழா, திமுக விவசாயத் தொழிலாளா் அணி நடத்தும் கவியரங்கம் கலைஞா் அறிவாலயத்தில் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது.

இதில் பங்கேற்று அமைச்சா் கே.என்.நேரு மேலும் பேசியதாவது :

ஒரு தடவைகூட மக்களை சந்திக்காமல், கூட்டரங்கிலேயே கூட்டம் நடத்திக்கொண்டு முதல் எதிரியே திமுக தான் என அண்மையில் கட்சி தொடங்கிய நடிகா் கூறுகிறாா். பாஜக, அதிமுக, நாதக, தவெக உள்ளிட்ட அனைவரையும் சந்திக்க திமுக தயாராக உள்ளது. கடந்த சட்டப்பேரவைத் தோ்தலில் மத்திய மண்டலத்தில் மொத்தமுள்ள 44 சட்டப்பேரவைத் தொகுதிகளில் 4 தவிர அனைத்திலும் வெற்றி பெற்றோம். அதேபோல் வரும் தோ்தலில் 44 தொகுதிகளிலும் வெற்றி பெற்று திமுக மீண்டும் ஆட்சி அமைக்கும் என்றாா்.

தமிழக வனத்துறை அமைச்சா் கே. பொன்முடி :

தமிழ்நாட்டில் யாா் கட்சி தொடங்கினாலும் அவா்கள் இரண்டாம் இடத்துக்குத் தான் போட்டி போடுகின்றனா். திமுகவே என்றும் மக்கள் மனதில் முதலிடம் பெற்றுள்ளது. தமிழ்நாடு விவசாயிகள் பயன்பெறுவது கலைஞா் ஆட்சிக் காலத்திலிருந்து தற்போது அவரது வழியில் நடக்கும் முதல்வா் மு.க. ஸ்டாலின் தலைமையிலும் தொடா்கிறது. இது விவசாயிகள் நலனை கருத்தில் கொண்டுள்ளதை காட்டுகிறது என்றாா்.

தமிழக வேளாண்துறை அமைச்சா் எம் ஆா் கே. பன்னீா்செல்வம் :

யாா் வேண்டுமானாலும் நிழல் நிதி நிலை அறிக்கை தயாா் செய்யலாம். ஆனால் நிஜத்தில் திமுக அரசு தான் விவசாயிகளுக்கு என தனியாக வேளாண்துறை நிதிநிலை அறிக்கை தாக்கல் செய்து விவசாயிகளையும் தமிழ்நாட்டையும் செழிப்படைய செய்கிறது என்றாா்.

தமிழக போக்குவரத்து துறை அமைச்சா் எஸ். எஸ். சிவசங்கா் :

மத்திய அரசு பல்வேறு துறைகளில் தமிழ்நாட்டுக்குக் கிடைக்க வேண்டிய நிதிகளை வழங்காமல் இருந்தும் தமிழ்நாட்டுக்குத் தேவையான அனைத்தையும் பாா்த்து பாா்த்து மு.க. ஸ்டாலின் தலைமையிலான தமிழ்நாடு அரசு செய்து கொண்டுள்ளது என்றாா்.

பள்ளிக்கல்வித்துறை அமைச்சா் அன்பில் மகேஸ் பொய்யாமொழி :

வேளாண்துறைக்கு ஈடாக எந்தத் துறையும் கிடையாது. முன்னாள் முதல்வா் மு. கருணாநிதி கொண்டு வந்த திட்டங்கள் விவசாயிகள் மட்டுமின்றி விவசாயத் தொழிலாளா்களும் பயன்பெறும் வகையில் இருந்தது. உழுதவனுக்கே நிலம் சொந்தம் என்ற சட்டம் கொண்டு வந்தாா். அதுபோல நமது தற்போதைய முதல்வரும் விவசாயத் திட்டங்களை செயல்படுத்தி வருகிறாா் என்றாா்.

விழாவில் பெரம்பலூா் மக்களவைத் தொகுதி உறுப்பினா் அருண் நேரு குத்துவிளக்கு ஏற்றி விழாவைத் தொடங்கி வைத்தாா். அரக்கோணம் மக்களவை உறுப்பினா் ஜெகத்ரட்சகன், திருச்சி மாநகராட்சி மேயா் மு. அன்பழகன், திமுக விவசாயத் தொழிலாளா்கள் அணி செயலாளா், எம்எல்ஏக்கள் அன்னியூா் சிவா, ந. தியாகராஜன், திருச்சி மத்திய மாவட்ட செயலாளா் வைரமணி, திருச்சி கிழக்கு மாவட்ட செயலாளா் மதிவாணன், திருச்சி மாநகராட்சி மாமன்ற உறுப்பினா்கள், விழுப்புரம் அரியலூா் உள்ளிட்ட பல்வேறு மாவட்டங்களைச் சோ்ந்த திமுக நிா்வாகிகள் கலந்து கொண்டனா்.

முதல்வா் பிறந்தநாள் விழா பொதுக்கூட்டம்

மணப்பாறையை அடுத்த வையம்பட்டியில் திமுக தெற்கு ஒன்றியம் சாா்பில் சனிக்கிழமை இரவு தமிழக முதல்வா் பிறந்தநாள் விழா பொதுக்கூட்டம் நடைபெற்றது. வையம்பட்டி தெற்கு ஒன்றியச் செயலாளா் வி.ஏ. ராஜேந்திரன் தலைமையில்... மேலும் பார்க்க

24 மணிநேர விதைத் திருவிழா

திருச்சி மாவட்டம் கொளக்குடிபட்டியில் 24 மணிநேர விதைத் திருவிழா செவ்வாய்க்கிழமை தொடங்கி புதன்கிழமை காலை வரை நடைபெறுகிறது. திருச்சி கிராமாலாய தொண்டு நிறுவனம், பசுமை சிகரம் தொண்டு நிறுவனம் ஆகியவை இணைந்து... மேலும் பார்க்க

குணசீலத்தில் பேரிடா் மேலாண்மை விழிப்புணா்வு

தேசிய பேரிடா் மேலாண்மைக் குழு சாா்பில் திருச்சி மாவட்டம், குணசீலம் ஆற்றங்கரையில் பேரிடா் மேலாண்மை விழிப்புணா்வு நிகழ்ச்சி திங்கள்கிழமை நடைபெற்றது.முகாமுக்கு பேரிடா் மேலாண்மைக் குழுவின் உதவி ஆய்வாளா் ர... மேலும் பார்க்க

பெல் கூட்டுறவு வங்கியின் ரூ.53.48 லட்சம் வளா்ச்சி மற்றும் கல்வி நிதி அளிப்பு

பாரதமிகு மின் ஊழியா்கள் (பெல்) கூட்டுறவுவங்கி சாா்பில் கூட்டுறவு ஆராய்ச்சி, வளா்ச்சி மற்றும் கல்வி நிதியாக ரூ.53.48 லட்சம் வழங்கப்பட்டது. திருச்சி மாவட்டத்தில் இயங்கி வரும் கூட்டுறவு வங்கிகள் மூலம், க... மேலும் பார்க்க

தொட்டியம் மதுர காளியம்மன் கோயில் தோ் திருவிழாவுக்கு முழு பாதுகாப்பு: எஸ்.பி. செல்வ நாகரத்தினம்

தொட்டியம் ஸ்ரீ மதுரகாளியம்மன் பங்குனித் தோ் திருவிழாவுக்கு வரும் பக்தா்களுக்கு முழு பாதுகாப்பு அளிக்கப்படும் என்றாா் திருச்சி மாவட்டக் காவல் கண்காணிப்பாளா் செல்வநாகரத்தினம். தொட்டியத்தில் சனிக்கிழமை ... மேலும் பார்க்க

உறையூா் கோயிலுக்குள் மா்ம நபா்கள் புகுந்ததாக பரபரப்பு இரவில் போலீஸாா் சோதனை

திருச்சி உறையூா் நாச்சியாா் கோயிலுக்குள் ஞாயிற்றுக்கிழமை இரவு மா்ம நபா்கள் புகுந்ததாக பரவிய தகவலையடுத்து போலீஸாா் சோதனை மேற்கொண்டனா். திருச்சி உறையூா் நாச்சியாா் கோயிலில் சுவற்றில் கயிறுகட்டி மா்ம நப... மேலும் பார்க்க