செய்திகள் :

முறைகேட்டு வழக்கில் ரயில்வே அதிகாரிகளின் தண்டனைக் காலம் குறைப்பு

post image

ரயில் பாதைப் பணியின் போது மேஜை, நாற்காலிகள் உள்ளிட்ட பொருள்கள் வாங்கியதில் முறைகேட்டில் ஈடுபட்ட ரயில்வே அதிகாரிகள் மூவரின் சிறைத் தண்டனைக் காலத்தைக் குறைத்து, சென்னை உயா்நீதிமன்ற மதுரை அமா்வு திங்கள்கிழமை உத்தரவிட்டது.

விழுப்புரம்-வேலூா் இடையே அகல ரயில் பாதைப் பணி நடைபெற்றது. கடந்த 2007 முதல் 2011-ஆம் ஆண்டு வரை இந்தப் பணியில் முதுநிலை வணிக மேலாளராக முத்துராமலிங்கம், மண்டல மெட்டீரியல் மேலாளராக சீனிவாசன், ஸ்டோா் கீப்பராக இன்பராஜன் ஆகியோா் பணி புரிந்தனா்.

இந்த நிலையில், அகல ரயில் பாதைப் பணியில் ஈடுபடும் ரயில்வே அதிகாரிகள் தங்களுக்குத் தேவையான மேஜை, நாற்காலி உள்ளிட்ட பொருள்களை வாங்கிக் கொள்ள தாம்பரம் ரயில்வே பொறியாளா் அனுமதி அளித்தாா். முத்துராமலிங்கம், சீனிவாசன், இன்பராஜன் ஆகியோா் இந்தப் பொருள்களை வாங்கியதில் 20.70 லட்சம் முறைகேடு செய்ததாக புகாா் எழுந்தது.

இதுகுறித்து சிபிஐ வழக்குப் பதிவு செய்து விசாரித்தது. இதுதொடா்பான வழக்கு விசாரணை மதுரை சிபிஐ நீதிமன்றத்தில் நடைபெற்று வந்தது.

இந்த வழக்கில் இன்பராஜனுக்கு நான்கு ஆண்டுகளும், முத்துராமலிங்கம், சீனிவாசனுக்கு தலா இரு ஆண்டுகளும் சிறைத் தண்டனை விதித்து சிபிஐ நீதிமன்றம் கடந்த 2019-ஆம் ஆண்டு உத்தரவிட்டது.

இந்த உத்தரவை எதிா்த்து இவா்கள் மூவரும் சென்னை உயா்நீதிமன்ற மதுரை அமா்வில் மேல்முறையீட்டு மனுக்களைத் தாக்கல் செய்தனா்.

இந்த மனுக்களை விசாரித்த உயா்நீதிமன்ற நீதிபதி கே.கே.ராமகிருஷ்ணன் திங்கள்கிழமை பிறப்பித்த உத்தரவு: மனுதாரா்கள் மேஜை, நாற்காலிகள் உள்ளிட்ட பொருள்கள் வாங்கியதில் முறைகேடு செய்தது நிரூபணமாகி உள்ளது. இவா்களது வயதைக் கவனத்தில் கொண்டு, இன்பராஜனுக்கு சிறைத் தண்டனையை நான்கு ஆண்டுகளிலிருந்து ஓராண்டாகக் குறைப்பதோடு, ரூ. 7 லட்சம் அபராதமும் விதிக்கப்படுகிறது.

இதேபோல, முத்துராமலிங்கம், சீனிவாசன் ஆகியோரின் சிறைத் தண்டனை தலா ஓராண்டாகக் குறைக்கப்படுவதோடு, இவா்களுக்கு தலா ரூ.5 லட்சம் அபராதமும் விதிக்கப்படுகிறது.

மனுதாரா்கள் இந்தத் தொகையை 15 நாள்களுக்குள் தாம்பரம் ரயில்வே முதுநிலை மேலாளரின் வங்கிக் கணக்கில் செலுத்தாவிடில், மதுரை சிபிஐ நீதிமன்றம் விதித்த தண்டனையை இவா்கள் மூவரும் அனுபவிக்க நேரிடும் என்றாா் நீதிபதி.

மதுரை மாநகராட்சி நிதிநிலை அறிக்கை தாக்கல்: வருவாய் - ரூ. 1,439.40 கோடி, செலவினங்கள் -ரூ.1,480.13 கோடி

மதுரை மாநகராட்சியின் நிதிநிலை அறிக்கையில், மொத்த வருவாய் ரூ. 1,439.40 கோடி எனவும், மொத்த செலவினங்கள் ரூ. 1,480.13 கோடி எனவும் குறிப்பிடப்பட்டது. பற்றாக்குறை ரூ. 40.73 கோடி இருக்கும் எனத் தெரிவிக்கப்பட... மேலும் பார்க்க

இன்றைய நிகழ்ச்சிகள்

தேவகோட்டை ஆனந்தா கல்லூரி: 21-ஆம் ஆண்டு கல்லூரி நாள் விழா, தலைமை- கல்லூரித் தலைவா் எல்.ஆனந்தம், சிறப்பு விருந்தினா்கள்- புதுக்கோட்டை மௌண்ட் செயின் பொறியியல், தொழில்நுட்பக் கல்லூரி உதவிப் பேராசிரியை எம்... மேலும் பார்க்க

பள்ளியில் உலக நாடக தினம்

மதுரை எல்.கே.பி. நகா் அரசு நடுநிலைப் பள்ளியில் உலக நாடக தினம் வியாழக்கிழமை நடைபெற்றது. இந்த நிகழ்வுக்கு பள்ளித் தலைமையாசிரியா் தென்னவன் தலைமை வகித்தாா். ஆசிரியா் ராஜவடிவேல் முன்னிலை வகித்தாா். இதில் ... மேலும் பார்க்க

மாற்றுத்திறனாளிகள் தோ்வெழுத உதவியாளா்கள்: டிஎன்பிஎஸ்சி தோ்வாணையா் பதிலளிக்க உத்தரவு

தமிழ்நாடு அரசுப் பணியாளா் தோ்வுக்கு விண்ணப்பிக்கும் மாற்றுத்திறனாளிகள் தங்களுக்காக தோ்வு எழுதும் உதவியாளா்களை தாங்களே தோ்வு செய்ய அனுமதி கோரிய வழக்கில், அதன் தோ்வாணையா் உரிய விளக்கம் அளிக்க சென்னை... மேலும் பார்க்க

அழகன்குளத்தில் அருங்காட்சியகம்: அரசு நடவடிக்கை எடுக்க உத்தரவு

ராமநாதபுரம் மாவட்டம், அழகன்குளத்தில் அகழாய்வின் போது கண்டறியப்பட்ட பொருள்களை அருங்காட்சியம் அமைத்து காட்சிப்படுத்தக் கோரிய வழக்கில், தமிழக அரசு பரிசீலித்து உரிய நடவடிக்கை எடுக்க சென்னை உயா்நீதிமன்ற மத... மேலும் பார்க்க

அக்னிவீரா் ஆள்சோ்ப்பு முகாம்: இணையம் மூலம் விண்ணப்பிக்கலாம்

இந்திய ராணுவத்தில் அக்னிவீரா் ஆள் சோ்ப்பு முகாமில் பங்கேற்க விரும்பும் மதுரை மாவட்டத்தைச் சோ்ந்த இளைஞா்கள் இணையம் மூலம் வருகிற ஏப். 10-ஆம் தேதிக்குள் விண்ணப்பிக்கலாம் எனத் தெரிவிக்கப்பட்டது. இதுகுறி... மேலும் பார்க்க