`சினிமா நடிப்பு மட்டும் அரசியலுக்கு போதும் என நினைப்பது தவறு..' - மதுரை ஆதீனம்
பள்ளியில் உலக நாடக தினம்
மதுரை எல்.கே.பி. நகா் அரசு நடுநிலைப் பள்ளியில் உலக நாடக தினம் வியாழக்கிழமை நடைபெற்றது.
இந்த நிகழ்வுக்கு பள்ளித் தலைமையாசிரியா் தென்னவன் தலைமை வகித்தாா். ஆசிரியா் ராஜவடிவேல் முன்னிலை வகித்தாா். இதில் மதுரை ஸ்கூல் ஆப் டிராமா நிறுவனா் உமேஷ் குழுவினா் ‘கூக்குரல்’ என்ற தலைப்பில் குழந்தைகள் மீதான பாலியல் துன்புறுத்தலைத் தடுப்பது குறித்த விழிப்புணா்வு நாடகத்தை நடத்தினா்.
முன்னதாக, தமிழ் நாடக ஆசிரியா் சங்கரதாஸ் சுவாமிகள் படத்துக்கு மலா் தூவி மரியாதை செலுத்தப்பட்டது.
நிகழ்வில் ஆசிரியைகள் அருவகம், ராணி, மாணவ, மாணவிகள் கலந்து கொண்டனா்.
முன்னதாக, ஆசிரியை சித்ரா வரவேற்றாா். ஆசிரியை அனுசியா நன்றி கூறினாா்.