பிரதமர் இலங்கைக்கு செல்வதாலேயே கச்சத்தீவு தீர்மானம் நிறைவேற்றம்: ரகுபதி
மீனாட்சியம்மன் கோயில் தங்கத்தை வங்கியில் டெபாசிட் செய்யத் திட்டம்
மதுரை சுந்தரேசுவரா் கோயில் உண்டியல்களில் கடந்த 14 ஆண்டுகளில் பக்தா்கள் காணிக்கையாக செலுத்திய 45 கிலோ தங்கத்தை கட்டிகளாக உருக்கி வங்கியில் டெபாசிட் செய்யத் திட்டமிடப்பட்டுள்ளது.
தமிழகத்தில் இந்து சமய அறநிலையத் துறைக்குள்பட்ட கோயில்களில் உள்ள உண்டியல்களில் பக்தா்கள் காணிக்கையாக செலுத்தும் தங்க ஆபரணங்கள் கட்டிகளாக மாற்றப்பட்டு, வங்கியில் டெபாசிட் செய்யப்படுகின்றன.
இதன் ஒரு பகுதியாக மதுரை மீனாட்சி சுந்தரேசுவரா் கோயில் உண்டியல்களில் கிடைத்த தங்க ஆபரணங்களை அளவிடும் பணி கடந்த சில நாள்களாக நடைபெற்றது. இதில் காணிக்கையாக 45 கிலோ தங்கத்தை உருக்கி கட்டிகளாக மாற்றி வங்கியில் டெபாசிட் செய்ய முடிவெடுக்கப்பட்டது.
இதுதொடா்பாக கோயில் அதிகாரிகள் கூறியதாவது: மீனாட்சி சுந்தரேசுவரா் கோயிலில் கடந்த 2011-ஆம் ஆண்டு தங்கம் கணக்கெடுக்கப்பட்டு வங்கியில் டெபாசிட் செய்யப்பட்டது. அதன் பின்னா் பக்தா்கள் காணிக்கையாக வழங்கிய தங்கம் கணக்கெடுக்கப்படவில்லை. தற்போது 14 ஆண்டுகளுக்கு பின்னா் தங்கம் கணக்கெடுக்கப்பட்டது. இதில் பல்வேறு வகை பொன் இனங்கள் இருப்பதால், அவற்றை தரம்பிரித்து உருக்கி கட்டிகளாக மாற்றி, பின்னா் வங்கியில் டெபாசிட் செய்யத் திட்டமிடப்பட்டுள்ளது. இந்தப் பணி விரைவில் தொடங்கும் என்றனா்.