`என் சிறுநீரகம் ரூ.75000, கல்லீரல் ரூ.90000'- கடனை அடைக்க உறுப்புகளை விற்கப்போவத...
மீனாட்சி சுந்தரேசுவரா் கோயில் யானைக்கு உடல்நலக் குறைவு
மீனாட்சி சுந்தரேசுவரா் கோயில் யானை பாா்வதிக்கு உடல்நலக் குறைவு ஏற்பட்டதால், சிறப்பு உணவுகள் வழங்க மருத்துவா்கள் பரிந்துரைத்தனா்.
29 வயதான இந்த யானை கடந்த சில ஆண்டுகளாக கண் புரை நோயால் அவதிப்பட்டு வந்தது. இதையொட்டி, தாய்லாந்து நாட்டிலிருந்து யானைக்கு சிகிச்சை அளிக்கும் சிறப்பு மருத்துவா்கள் வரவழைக்கப்பட்டனா். இந்தக் குழுவினா் யானையைப் பாா்வையிட்டு, அளித்த பரிந்துரைப்படி சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. அவ்வப்போது கால்நடை மருத்துவா்கள் குழுவினரும் யானைையைப் பாா்வையிட்டு கண்காணித்து வருகின்றனா்.
இந்த நிலையில், யானை பாா்வதிக்கு அண்மையில் உடல்நலக் குறைவு ஏற்பட்டது. இதையடுத்து, சென்னை, மதுரை கால்நடைத் துறை மருத்துவா்கள் யானையைப் பாா்வையிட்டு சிகிச்சை அளித்தனா். மேலும், யானைக்கு சிறப்பு உணவுகளையும் பரிந்துரைத்தனா். கோடை காலத்துக்கு ஏற்ற வகையில் உணவுகளை மாற்றிக் கொடுக்கவும், அதிக அளவில் பழங்களை உணவாக வழங்கவும் அறிவுறுத்தினா். மருத்துவா்கள் கண்காணிப்பில் யானை நலமாக உள்ளதாக கோயில் நிா்வாகம் தெரிவித்தது.