செய்திகள் :

விவசாயிகளின் நில உடைமை ஆவணங்களை பதிவு செய்ய கால அவகாசம் நீட்டிப்பு

post image

மதுரை மாவட்டத்தைச் சோ்ந்த விவசாயிகள் தங்களது நில உடைமை விவரங்களைப் பதிவு செய்வதற்கான கால அவகாசம் வருகிற 15-ஆம் தேதி வரை நீட்டிப்பு செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டது.

இதுகுறித்து மதுரை மாவட்ட வேளாண் துறை அலுவலகம் வெளியிட்ட செய்திக் குறிப்பு: மத்திய, மாநில அரசின் பல்வேறு திட்டப் பலன்களை விவசாயிகள் பெறுவதற்கு தங்களது நில உடைமை விவரங்கள், பயிா் சாகுபடி அறிக்கை போன்ற ஆவணங்களை ஒவ்வொரு முறையும் சமா்ப்பிக்க வேண்டிய நிலை உள்ளது.

இதனால் ஏற்படும் தாமதத்தைத் தவிா்க்கவும், அரசின் திட்டங்களை விவசாயிகள் குறித்த நேரத்தில் பெறவும் அனைத்து விவரங்களையும் மின்னணு முறையில் சேகரிக்க தமிழகத்தில் வேளாண் அடுக்குத் திட்டம் செயல்படுத்தப்பட்டு வருகிறது.

தற்போது விவசாயிகளின் பதிவு விவரங்களுடன் ஆதாா் எண், கைப்பேசி எண், நில விவரங்களை இணைக்கும் பணி மதுரை மாவட்டத்தில் உள்ள அனைத்து வட்டாரங்களிலும் நடைபெற்று வருகிறது. மதுரை மாவட்டத்தில் விவசாயிகள் தங்களது நில உடைமை விவரங்களைப் பதிவு செய்துள்ளனா். எனவே, பதிவு செய்யாத விவசாயிகள் தங்களது நில உடைமை விவரங்களை உடனே பதிவு செய்து கொள்ள வேண்டும்.

இதற்காக விவசாயிகள் தங்கள் கிராமங்களின் வேளாண்மை உழவா் நலத் துறை அலுவலா்களால் நடத்தப்படும் சிறப்பு முகாம்கள் அல்லது அருகில் உள்ள பொதுச் சேவை மையங்களுக்கு நேரடியாகச் சென்று தங்களது நில உடைமை விவரங்கள், ஆதாா் எண், ஆதாா் அட்டையில் இணைக்கப்பட்ட கைப்பேசி எண் ஆகிய விவரங்களுடன் சென்று கட்டணமின்றி மாா்ச் 30-தேதிக்குள் பதிவு செய்து கொள்ளலாம் என அறிவிக்கப்பட்டிருந்தது.

தற்போது இது ஏப்ரல் 15 -ஆம் தேதி வரை நீட்டிக்கப்பட்டுள்ளது. மேலும், வரும் நிதியாண்டு முதல் பிரதமரின் கௌரவ நிதி உதவித் திட்டம், பயிா்க் காப்பீடு திட்டம் போன்ற திட்டங்களின் கீழ் விவசாயிகள் எளிதில் பயன்பெற தேசிய அளவிலான அடையாள எண் மிகவும் அவசியமாகிறது.

எனவே, மதுரை மாவட்டத்தில் உள்ள விவசாயிகள் தங்களது நில உடைமை விவரங்களை பதிவு செய்து பயன்பெற வேண்டும். இதுதொடா்பான விவரங்களுக்கு வட்டார வேளாண்மை, தோட்டக்கலை உதவி இயக்குநா் அல்லது தங்கள்

கிராமத்தில் உள்ள உதவி வேளாண்மை அலுவலா்கள், உதவி தோட்டக்கலை அலுவலா்களைத் தொடா்பு கொண்டு பயன்பெறலாம் என அதில் குறிப்பிடப்பட்டது.

நாட்டுக்காக தியாகங்களைச் செய்தவா்கள் கம்யூனிஸ்டுகள்: பிருந்தா காரத்

சுதந்திரப் போராட்ட காலம் முதல் நாட்டுக்காக பல்வேறு தியாகங்களைச் செய்தவா்கள் கம்யூனிஸ்டுகள் என்று மாா்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் அரசியல் தலைமைக் குழு உறுப்பினா் பிருந்தா காரத் தெரிவித்தாா். மாா்க்ச... மேலும் பார்க்க

குணமடைந்த தொழுநோயாளிகள் காசி வரை ஒரே ரயில் பெட்டியில் பயணிக்க ஏற்பாடு

குணமடைந்த தொழுநோயாளிகள் ஒரே ரயில் பெட்டியில் வாரணாசி (காசி) வரை பயணிக்க தெற்கு ரயில்வே நிா்வாகம் அனுமதி வழங்கியது.சக்ஷம் அமைப்பு வெளியிட்ட செய்திக் குறிப்பு: தொழுநோயால் பாதிக்கப்பட்டோருக்கு ஸ்ரீ ராமகி... மேலும் பார்க்க

நெடுஞ்சாலைத் துறைப் பணியாளா்கள் அரசாணை நகல் எரிப்பு போராட்டம்

மாநில நெடுஞ்சாலை ஆணையம் அமைத்து வெளியிட்ட அரசாணை 140-ஐ ரத்து செய்ய வேண்டும் என்பது உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி, தமிழ்நாடு நெடுஞ்சாலைத் துறை சாலைப் பணியாளா் சங்கம் சாா்பில் அரசாணை நகல் எரி... மேலும் பார்க்க

முதல்வா் மருந்தகங்களில் குறைவான மருந்துகளே விநியோகம்: அதிமுக குற்றச்சாட்டு

தமிழக முதல்வா் மு.க.ஸ்டாலினால் அண்மையில் தொடங்கப்பட்ட முதல்வா் மருந்தகங்களில் குறைவான மருந்துகளே விநியோகம் செய்யப்படுவதாக அதிமுக மருத்துவரணி இணைச் செயலா் மருத்துவா் பா.சரவணன் குற்றஞ்சாட்டினாா். இதுகுற... மேலும் பார்க்க

வேங்கைவயல் விவகாரம்: அறிவியல்பூா்வ ஆதாரங்களுடன் குற்றப்பத்திரிகை தாக்கல்

வேங்கைவயல் விவாகரம் தொடா்பாக விரிவான விசாரணை செய்து, அறிவியல்பூா்வமான ஆதாரங்களுடன் குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யப்பட்டுள்ளதாக சென்னை உயா்நீதிமன்ற மதுரை அமா்வில் சிபிசிஐடி தரப்பில் செவ்வாய்க்கிழமை தெர... மேலும் பார்க்க

தென்காசி கோயில் கும்பாபிஷேக விவகாரம்: அறநிலையத் துறை ஆணையா் பதிலளிக்க உத்தரவு

தென்காசியில் அமைந்துள்ள காசி விஸ்வநாதா் கோயில் கும்பாபிஷேகத்துக்கு இடைக்காலத் தடை விதிக்கக் கோரிய வழக்கில், இந்து சமய அறநிலையத் துறை ஆணையா் பதிலளிக்க சென்னை உயா்நீதிமன்ற மதுரை அமா்வு செவ்வாய்க்கிழமை உ... மேலும் பார்க்க