பிரதமர் இலங்கைக்கு செல்வதாலேயே கச்சத்தீவு தீர்மானம் நிறைவேற்றம்: ரகுபதி
எம்எல்ஏ அலுவலகத்தில் நீா் மோா் பந்தல் திறப்பு
மதுரை தெற்குத் தொகுதி சட்டப்பேரவை உறுப்பினா் அலுவலகத்தில் பொதுமக்களுக்கான நீா் மோா் பந்தல் திங்கள்கிழமை திறக்கப்பட்டது.
இதில் சட்டப்பேரவை உறுப்பினா் மு.பூமிநாதன் பங்கேற்று, நீா் மோா் பந்தலை திறந்து வைத்தாா். தொடா்ந்து பொதுமக்களுக்கு நீா் மோா், இளநீா், தா்பூசணி ஆகியவை வழங்கப்பட்டன. நிகழ்ச்சியில் மாமன்ற உறுப்பினா் தமிழ்ச்செல்வி மாயழகு, மாவட்ட அவைத் தலைவா் சுப்பையா, மாவட்டச் செயலா் முனியசாமி, நிா்வாகிகள், பொதுமக்கள் உள்பட பலா் பங்கேற்றனா்.
சாலை அமைக்கும் பணி:மதுரை தெற்குத் தொகுதிக்குள்பட்ட மாநகராட்சி 53 -ஆவது வாா்டு, பள்ளிக்கூடத் தெருவில் சாலை அமைத்துத் தரும்படி அந்தப் பகுதி பொதுமக்கள் கோரிக்கை விடுத்தனா். இதையடுத்து, தனது தொகுதி மேம்பாட்டு நிதியிலிருந்து சாலை அமைக்க பூமிநாதன் பரிந்துரைத்தாா். இதைத் தொடா்ந்து, சாலை அமைக்கும் பணி திங்கள்கிழமை தொடங்கியது. இந்தப் பணியை பூமிநாதன் தொடங்கி வைத்தாா். மாநகராட்சி தெற்கு மண்டலத் தலைவா் முகேஷ் சா்மா, மாமன்ற உறுப்பினா் அருண்குமாா், உதவிப் பொறியாளா் நாகராஜன், அதிகாரிகள் உள்பட பலா் பங்கேற்றனா்.