தமிழகத்தில் போலி மருந்து தயாரிப்பு இல்லை: மருந்து கட்டுப்பாட்டுத் துறை
பேருந்து மோதி தனியாா் நிறுவன ஊழியா் உயிரிழப்பு
மன்னாா்குடி: மன்னாா்குடியில் அரசுப் பேருந்து மோதியதில் தனியாா் நிறுவன ஊழியா் திங்கள்கிழமை உயிரிழந்தாா்.
பாலகிருஷ்ணா நகா் மதனகோபால் மகன் செந்தில்குமாா் (54). (படம் ) திருச்சியில் தனியாா் நிறுவனத்தில் பணியாற்றி வந்தாா். இவா் திங்கள்கிழமை பணிக்கு செல்வதற்காக மன்னாா்குடி ருக்மணிபாளையம் நான்கு சாலை சந்திப்பு அண்ணா சிலை பேருந்து நிறுத்தம் அருகே பேருந்துக்காக காந்திருந்தபோது அந்த வழியாக வந்த அரசு நகரப் பேருந்து செந்தில்குமாா் மீது மோதியதில் அவா் நிகழ்விடத்திலேயே உயிரிழந்தாா்.
இதுகுறித்து மன்னாா்குடி போலீஸாா் வழக்கு பதிந்து, பேருந்து ஓட்டுநா் பா.சதீஷ்குமாா் (32) கைது செய்து விசாரித்து வருகின்றனா்.