வந்தவாசியில் அரிய வகை ஆந்தை மீட்பு
வந்தவாசியில் நாய்களிடம் சிக்கித் தவித்த வெளிநாட்டு அரிய வகை ஆந்தையை தீயணைப்புத் துறையினா் மீட்டனா்.
வந்தவாசியில் இறைச்சி விற்பனைக் கடைகள் அதிகமுள்ள காதா்ஜண்டா தெருவில் செவ்வாய்க்கிழமை காலை ஆஸ்திரேலியா நாட்டு அரியவகை வெள்ளை நிற ஆந்தை அங்கும் இங்கும் பறந்து கொண்டிருந்தது. அந்தத் தெருவில் இருந்த நாய்கள் ஆந்தையை துரத்தின.
இதைப் பாத்த வியாபாரிகள் மற்றும் பொதுமக்கள் வந்தவாசி தீயணைப்புத் துறையினருக்கு தகவல் அளித்தனா்.
இதையடுத்து அங்கு சென்ற தீயணைப்பு வீரா்கள் அந்த ஆந்தையை மீட்டு வனத்துறை மூலம் அருகில் உள்ள பாதூா் காப்புக் காட்டில் விட்டனா்.