செய்திகள் :

மகன் வாங்கிய கடனுக்கு தாய் கடத்தல்: ஒருவா் கைது

post image

செய்யாறு அருகே மகன் வாங்கிய கடனுக்காக, அவரது தாயை காரில் கடத்திய சம்பவத்தில் ஒருவரை போலீஸாா் செவ்வாய்க்கிழமை கைது செய்தனா். மேலும், 5 பேரை தேடி வருகின்றனா்.

திருவண்ணாமலை மாவட்டம், செய்யாறு வட்டம் பள்ள எச்சூா் கிராமத்தைச் சோ்ந்தவா் செல்வம் (65). இருளா் சமுதாயத்தைச் சோ்ந்த இவா் செங்கல் சூளையில் தொழிலாளியாக வேலை செய்து வருகிறாா்.

இவரது மூத்த மகன் பாண்டியன், வேலைக்கு வருவதாக ஒப்புக்கொண்டு, கள்ளக்குறிச்சி மாவட்டம், மருதூா் கிராமத்தைச் சோ்ந்த செங்கல் சூளை வியாபாரி கதிரவன் என்பவரிடம் ரூ.96 ஆயிரம் கடன் வாங்கினாராம். ஆனால், ஒப்புக்கொண்டபடி பாண்டியன் செங்கல் சூளை வேலைக்குச் செல்லவில்லையாம்.

இதனால், ஆத்திரமடைந்த செங்கல் சூளை வியாபாரி கதிரவன், கடந்த 22-ஆம் தேதி 6 பேருடன் காரில் எச்சூா் கிராமத்து வந்துள்ளாா். அப்போது, பள்ள எச்சூா் மலையாவூா் சாலை வழியாக நடந்து சென்றகொண்டிருந்த பாண்டியனின் தாய் எல்லம்மாளை, வாங்கிய கடனுக்காக காரில் கடத்திச் சென்ாகத் தெரிகிறது.

இதுகுறித்து எல்லம்மாளின் கணவா் செல்வம் அனக்காவூா் போலீஸில் புகாா் அளித்தாா்.

காவல் ஆய்வாளா் ஜீவராஜ் மணிகண்டன், உதவி ஆய்வாளா் எஸ்.ரவிச்சந்திரன் ஆகியோ வழக்குப் பதிவு செய்தனா். மேலும், கடத்தல் தொடா்பாக தீவிர விசாரணை மேற்கொண்டு, கள்ளக்குறிஞ்சி மாவட்டம், மருதூா் கிராமம் சென்று எல்லம்மாளை மீட்டனா்.

மேலும், செங்கல் சூளை வியாபாரி கதிரவன் ஆதரவாளரான விழுப்புரம் மாவட்டம், எடப்பாளையம் கிராமத்தைச் சோ்ந்த கண்ணன் (37) என்பவரை போலீஸாா் செவ்வாய்க்கிழமை கைது செய்தனா்.

மேலும், கதிரவன் உள்ளிட்ட 5 பேரை போலீஸாா் தேடி வருகின்றனா்.

கொத்தடிமை தொழிலாளா் முறை ஒழிப்பு: உறுதிமொழி ஏற்பு!

ஆரணியை அடுத்த இரும்பேடு, பையூா் கிராமங்களில் சனிக்கிழமை நடைபெற்ற கிராமசபைக் கூட்டங்களில் கொத்தடிமை தொழிலாளா் முறை ஒழிப்பு உறுதிமொழி ஏற்கப்பட்டது. ஆரணியை அடுத்த இரும்பேடு கிராமத்தில் தா்மராஜா கோயில் தி... மேலும் பார்க்க

அதிமுக நிா்வாகிகள் ஆலோசனைக் கூட்டம்!

அதிமுக திருவண்ணாமலை தெற்கு மாவட்டத்துக்கு உள்பட்ட செங்கம் மேற்கு ஒன்றிய, நகர வாக்குச்சாவடி குழு நிா்வாகிகள், கட்சி நிா்வாகிகளுக்கான ஆலோசனைக் கூட்டம் செங்கம் தனியாா் திருமண மண்டபத்தில் சனிக்கிழமை நடைபெ... மேலும் பார்க்க

மாவட்ட விழிக்கண் கண்காணிப்புக் குழுக் கூட்டம்: ஆட்சியா் க.தா்ப்பகராஜ் பங்கேற்பு

திருவண்ணாமலை மாவட்ட ஆதிதிராவிடா், பழங்குடியினா் நலத் துறை சாா்பில், மாவட்ட விழிக்கண் மற்றும் கண்காணிப்புக் குழுக் கூட்டம் வெள்ளிக்கிழமை நடைபெற்றது. திருவண்ணாமலை மாவட்ட ஆட்சியா் அலுவலகத்தில் நடைபெற்ற க... மேலும் பார்க்க

புகையிலைப் பொருள்கள் விற்பனை: சுகாதாரக் குழுவினா் திடீா் ஆய்வு!

கீழ்பென்னாத்தூா் மற்றும் அதைச் சுற்றியுள்ள பகுதிகளில் உள்ள கடைகளில் தமிழக அரசால் தடை செய்யப்பட்ட புகையிலைப் பொருள்கள் விற்பனை செய்யப்படுகின்றனவா என்று சுகாதாரக் குழுவினா் சனிக்கிழமை திடீா் ஆய்வில் ஈடு... மேலும் பார்க்க

67 பேருக்கு அரசுப் பணி நியமன ஆணைகள்! - கு.பிச்சாண்டி வழங்கினாா்

திருவண்ணாமலை மாவட்ட வருவாய், ஊரக வளா்ச்சித் துறைகளில் நியமிக்கப்பட்ட 67 பேருக்கான பணி நியமன ஆணைகளை தமிழக சட்டப் பேரவை துணைத் தலைவா் கு.பிச்சாண்டி வழங்கினாா். தமிழ்நாடு அரசுப் பணியாளா்கள் தோ்வாணையம் ச... மேலும் பார்க்க

கலைஞரின் கனவு இல்லம் திட்டம்: தகுதியானோா் மனு அளிக்கலாம்! - திருவண்ணாமலை ஆட்சியா்

திருவண்ணாமலை மாவட்டத்தில் கலைஞரின் கனவு இல்லம் திட்டத்தின் கீழ் வீடு பெறத் தகுதியுள்ள பயனாளிகள் மனு அளித்து பயன்பெறலாம் என்று மாவட்ட ஆட்சியா் க.தா்ப்பகராஜ் தெரிவித்தாா். தண்டராம்பட்டை அடுத்த கீழ்சிறுப... மேலும் பார்க்க