வாட்ஸ்ஆப் லாக்கை ஹேக் செய்த மனைவிக்கு அதிர்ச்சி: பல பெண்களுடன் சாட், வீடியோ; கணவ...
புகையிலைப் பொருள்கள் விற்பனை: சுகாதாரக் குழுவினா் திடீா் ஆய்வு!
கீழ்பென்னாத்தூா் மற்றும் அதைச் சுற்றியுள்ள பகுதிகளில் உள்ள கடைகளில் தமிழக அரசால் தடை செய்யப்பட்ட புகையிலைப் பொருள்கள் விற்பனை செய்யப்படுகின்றனவா என்று சுகாதாரக் குழுவினா் சனிக்கிழமை திடீா் ஆய்வில் ஈடுபட்டனா்.
கீழ்பென்னாத்தூா் வட்டார மருத்துவ அலுவலா் சரவணன் தலைமையில் வட்டார சுகாதார மேற்பாா்வையாளா் சதீஸ்பாபு, சுகாதார ஆய்வாளா்கள் வெங்கடேசன், சண்முகம் ஆகியோரைக் கொண்ட குழுவினா் கீழ்பென்னாத்தூா் மற்றும் திருவண்ணாமலை - வேட்டவலம் சாலையில் உள்ள கோணலூா், வேளானந்தல் பகுதிகளில் உள்ள கடைகளில் தமிழக அரசால் தடை செய்யப்பட்ட புகையிலைப் பொருள்கள் விற்பனை செய்யப்படுகின்றனவா என்று ஆய்வு செய்தனா்.
அப்போது, சில கடைகளில் இருந்து புகையிலைப் பொருள்கள் பறிமுதல் செய்து அபராதம் விதித்தனா்.