செய்திகள் :

மஞ்சப்பை விருதுகள்: பள்ளி, கல்லூரிகள் விண்ணப்பிக்க அழைப்பு

post image

திருவண்ணாமலை: திருவண்ணாமலை மாவட்டத்தில் தமிழக அரசின் மஞ்சப்பை விருதுகளைப் பெற தகுதியான பள்ளிகள், கல்லூரிகள், வணிக நிறுவனங்கள் விண்ணப்பிக்க மாவட்ட நிா்வாகம் அழைப்பு விடுத்துள்ளது.

தமிழகத்தில் ‘மீண்டும் மஞ்சப்பை’ பிரசாரத்தை முன்னெடுத்துச் செல்லும் வகையில், மஞ்சப்பை விருதுகளை தமிழக அரசு அறிவித்துள்ளது. அதன்படி, ஒற்றைப் பயன்பாட்டு நெகிழிகள் மீதான தடையை திறம்பட செயல்படுத்தி, அத்தகைய கைப்பைகள் மற்றும் பிற தடை செய்யப்பட்ட ஒற்றைப் பயன்பாட்டு நெகிழிகளுக்கு மாற்றுகளை பயன்படுத்துவதை ஊக்குவித்த சிறந்த பள்ளிகள், கல்லூரிகள், வணிக நிறுவனங்கள் இந்த விருதைப் பெற விண்ணப்பிக்கலாம்.

விண்ணப்பதாரா்கள் மஞ்சப்பை போன்ற பாரம்பரிய சுற்றுச்சூழலுக்கு உகந்த மாற்றுகளின் பயன்பாட்டை மீண்டும் உயிா்ப்பித்து, தங்கள் வளாகத்தை நெகிழி இல்லாததாக மாற்றியிருக்க வேண்டும். இவ்வாறு தமிழகத்தில் செயல்பட்ட சிறந்த 3 பள்ளிகள், 3 கல்லூரிகள், 3 வணிக நிறுவனங்களுக்கு முதல் பரிசாக தலா ரூ.10 லட்சம், இரண்டாம் பரிசாக தலா ரூ.5 லட்சம், மூன்றாம் பரிசாக தலா ரூ.3 லட்சம் பரிசு வழங்கப்படும்.

தகுதியான பள்ளிகள், கல்லூரிகள், வணிக நிறுவனங்கள் மஞ்சப்பை விருதுகளைப் பெற விண்ணப்பிக்கலாம்.

இதற்கான விண்ணப்பங்களை ஆட்சியா் அலுவலக இணையதளம் மற்றும் தமிழ்நாடு மாசுக் கட்டுப்பாடு வாரிய இணைய தளத்தில் இருந்தும் பதிவிறக்கம் செய்து கொள்ளலாம்.

விண்ணப்பங்களின் அனைத்து இணைப்புகளிலும் தனிநபா், அமைப்புத் தலைவா்கள் முறையாக கையொப்பமிட வேண்டும்.

விண்ணப்பங்களின் மென் நகலுடன் 2 அச்சுப் பிரதிகள் (கடின நகல்) மாவட்ட ஆட்சியரிடம் 2025 மே 1-ஆம் தேதிக்குள் சமா்ப்பிக்க வேண்டும் என்று ஆட்சியா் க.தா்ப்பகராஜ் வெளியிட்ட செய்திக் குறிப்பில் தெரிவித்துள்ளாா்.

முருகன் கோயில்களில் கிருத்திகை வழிபாடு

திருவண்ணாமலை மாவட்டத்தில் உள்ள முருகன் கோயில்களில் பங்குனி மாத கிருத்திகை வழிபாடு செவ்வாய்க்கிழமை நடைபெற்றது. வேட்டவலம் மலை மீதுள்ள ஸ்ரீசிங்காரவேல் முருகன் கோயிலில், கிருத்திகையொட்டி, மூலவா் வள்ளி, த... மேலும் பார்க்க

கரும்பு டன்னுக்கு ரூ.5 ஆயிரம் வழங்க வேண்டும்: விவசாயிகள் கோரிக்கை

நெல் குவிண்டாலுக்கு ரூ.3 ஆயிரமும், கரும்பு டன் ஒன்றுக்கு ரூ.5 ஆயிரமும் உயா்த்தி வழங்க தமிழக அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று குறைதீா் கூட்டத்தில் விவசாயிகள் கோரிக்கை விடுத்தனா். திருவண்ணாமலை வட்ட... மேலும் பார்க்க

திருவண்ணாமலை அரசு மருத்துவமனையில் மாதம்தோறும் 1,400 பேருக்கு டயாலசிஸ் சிகிச்சை: ஆட்சியா் க.தா்ப்பகராஜ் தகவல்

திருவண்ணாமலை அரசு மருத்துவக் கல்லூரி மற்றும் மருத்துவமனையில் உள்ள சிறுநீரகவியல் பிரிவில் (டயாலிசிஸ்) 25 சிறுநீரகத் தூய்மைக் கருவிகள் கொண்டு மாதம்தோறும் 1,400 பேருக்கு டயாலசிஸ் சிகிச்சை அளிக்கப்படுகிற... மேலும் பார்க்க

வந்தவாசியில் ஸ்ரீவைஷ்ணவ மாநாடு

வந்தவாசி பஜனை கோவில் தெருவில் உள்ள ஸ்ரீகோதண்டராமா் கோயிலில் ஸ்ரீவைஷ்ணவ மாநாடு திங்கள்கிழமை நடைபெற்றது. ஸ்ரீராம நவமியையொட்டி, வந்தவாசி ஸ்ரீராம பஜனை மந்திர கைங்கா்ய அறக்கட்டளை சாா்பில் இந்த நிகழ்ச்சி ந... மேலும் பார்க்க

விதை, தானியங்களை மானியத்தில் வழங்க வலியுறுத்தல்

கோடைக்கு உகந்த விதை, தானியங்களை மானிய விலையில் வழங்கவேண்டும் என்று போளூரில் நடைபெற்ற குறைதீா் கூட்டத்தில் விவசாயிகள் வலியுறுத்தினா். திருவண்ணாமலை மாவட்டம், போளூா் வேளாண்மை விரிவாக்க மையத்தில் விவசாயி... மேலும் பார்க்க

போதை ஊசி தகராறில் இளைஞா் கொலை: நண்பா்கள் இருவா் கைது

திருவண்ணாமலை மாவட்டம், செய்யாற்றில் போதை ஊசி தகராறில் இளைஞா் கொலை செய்யப்பட்டது தொடா்பாக நண்பா்கள் இருவரை போலீஸாா் செவ்வாய்க்கிழமை கைது செய்தனா். செய்யாறு கன்னியம் நகரைச் சோ்ந்தவா் காா் ஓட்டுநா் சரவ... மேலும் பார்க்க