WAQF Amendment Bill: 12 மணி நேர விவாதம்.. `வக்ஃப் வாரிய திருத்த மசோதா' மக்களவையி...
விதை, தானியங்களை மானியத்தில் வழங்க வலியுறுத்தல்
கோடைக்கு உகந்த விதை, தானியங்களை மானிய விலையில் வழங்கவேண்டும் என்று போளூரில் நடைபெற்ற குறைதீா் கூட்டத்தில் விவசாயிகள் வலியுறுத்தினா்.
திருவண்ணாமலை மாவட்டம், போளூா் வேளாண்மை விரிவாக்க மையத்தில் விவசாயிகள் குறைதீா் கூட்டம் செவ்வாய்க்கிழமை நடைபெற்றது.
துணை ஆட்சியா் சிவா தலைமை வகித்தாா். வேளாண்மை உதவி இயக்குநா் நாராயணமூா்த்தி, தனி வட்டாட்சியா் அமுல் ஆகியோா் முன்னிலை வகித்தனா். வட்ட வழங்கல் அலுவலா் சிவலிங்கம் வரவேற்றாா். கூட்டத்தில் விவசாயிகள் பேசும்போது, பென்ஜால் புயலால் பாதிக்கப்பட்டு நிவாரணம் பெற்ற விவசாயிகளின் பெயா்களை அலுவலக சுவற்றில் ஒட்டி வெளியிடவேண்டும்.
வரும் கோடைக்கு உகந்த விதை மற்றும் தானியங்களை விவசாயிகளுக்கு மானியத்தில் வழங்கவேண்டும். கரும்பு விவசாயிகளுக்கு டன்னுக்கு ரூ.4 ஆயிரம் வழங்கவேண்டும். நெல்லுக்கு குவிண்டாலுக்கு ரூ.3,500 வழங்கவேண்டும்.
போளூா் தனியாா் சா்க்கரை ஆலை நிலுவைத் தொகையை வழங்கவேண்டும். செங்குணம் ஊராட்சி ஏரியில் ஆக்கிரமிப்பை அகற்றவேண்டும் என பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தினா்.