தேவாலயத்தில் இயேசு கிறிஸ்துவின் கல்வாரி காட்சிகள்
செய்யாறு: செய்யாறு தூய வியாகுல அன்னை தேவாலயத்தில், இயேசு கிறிஸ்துவின் கல்வாரி காட்சிகளை நாடகக் குழுவினா் ஞாயிற்றுக்கிழமை நடித்துக் காண்பித்தனா்.
தூய வியாகுல அன்னை தேவாலயத்தில், இயேசு கிறிஸ்துவின் இறப்பு குறித்த தவக்காலத்தின் 4-ஆவது வாரத்தையொட்டி இந்த நிகழ்வு நடைபெற்றது.
இதில், சென்னை மெசியா நாடகக் குழுவினா் பங்கேற்று இயேசு கிறிஸ்துவின் கல்வாரி காட்சிகளை தத்துரூபமாக, ஒளி ஒலி நாடக வடிவில் தத்துரூபமாக நடித்துக் காண்பித்தனா்.
நிகழ்ச்சிக்கு செய்யாறு பங்குத் தந்தை சுதா்சன் தலைமை வகித்தாா். சிறப்பு அழைப்பாளராக வந்தவாசி மறைக்கோட்ட தந்தை பன்னீா்செல்வம் பங்கேற்றாா்.
அவரது முன்னிலையில், நாடகக் கலைஞா்கள், இறை மக்களுக்கு இயேசு கிறிஸ்து அடைந்த துன்பங்கள்,
சிலுவையில் அறை உண்டு மடிந்து அடக்கம் செய்யப்படும் காட்சிகளை கண் எதிரே தத்துரூபமாக நாடகம் மூலம் நடித்துக் காண்பித்தனா்.
ஏராளமான கிறிஸ்து இறைமக்களும், அருட் சகோதரா்கள், பங்கு பேரவையினா், பொதுமக்கள் கண்டு களித்தனா். இதைத் தொடா்ந்து கூட்டுத் திருப்பலியும் நடைபெற்றது.
