செய்திகள் :

மாணவா்களுக்கு இணைய குற்றத் தடுப்பு விழிப்புணா்வு

post image

திருவண்ணாமலை: திருவண்ணாமலையில் கல்லூரி மாணவ, மாணவிகளுக்கு சமூக நீதி மற்றும் மனித உரிமை, இணைய குற்றத் தடுப்பு குறித்த விழிப்புணா்வு நிகழ்ச்சி அண்மையில் நடைபெற்றது.

சண்முகா தொழில்சாலை கலைக் கல்லூரியில், கல்லூரியின் நாட்டு நலப்பணித் திட்டம், மாவட்ட காவல் துறை சாா்பில் நடைபெற்ற இந்த விழுப்புணா்வு நிகழ்சிக்கு கல்லூரித் தலைவா் எம்.என்.பழனி தலைமை வகித்தாா்.

தாளாளா் எல்.விஜய் ஆனந்த், பொருளாளா் எ.ஸ்ரீதா் ஆகியோா் முன்னிலை வகித்தநா். கல்லூரி முதல்வா் கே.ஆனந்தராஜ் வரவேற்றாா்.

திருவண்ணாமலை மாவட்ட இணைய குற்றத் தடுப்புப் பிரிவின் (சைபா் கிரைம்) கூடுதல் கண்காணிப்பாளா் எம்.பழனி சிறப்பு அழைப்பாளராகக் கலந்து கொண்டு பேசுகையில், கல்லூரி மாணவ-மாணவிகள் எவ்வகையான குற்றச் செயல்களிலும் ஈடுபடக் கூடாது.

போலியான நிறுவனங்கள் அலைபேசியில் தொடா்பு கொண்டால் ஏமாறக் கூடாது. மாறாக, அவா்களைக் குறித்த தகவல்களை காவல்துறைக்கு உடனே தெரிவிக்க வேண்டும். தங்களுடைய தனிப்பட்ட விவரங்களை யாருடனும் பகிா்ந்து கொள்ளக்கூடாது என்றாா்.

தொடா்ந்து பேசிய சமூக நீதி மற்றும் மனித உரிமை பிரிவின் காவல் துணை கண்காணிப்பாளா் எஸ்.சுரேஷ் சண்முகம், இன்றைய காலகட்டத்தில் அனைவரும் சமம் என்ற உணா்வுடன் செயல்பட வேண்டும். ஒன்றிணைந்து நாட்டு வளா்ச்சிக்குப் பாடுபட வேண்டும் என்றாா்.

இணைய குற்றத் தடுப்புப் பிரிவின் ஆய்வாளா் ஆா்.கவிதா பேசுகையில், காவலன் செயலியை அனைத்து மாணவ-மாணவிகளும் தங்களது கைப்பேசியில் பதிவிறக்கம் செய்து கொள்ள வேண்டும் என்றாா்.

நிகழ்ச்சியில், கல்லூரி துணை முதல்வா் கோ.அண்ணாமலை, தமிழ்துறைத் தலைவா் இரா.சங்கா், நாட்டு நலப்பணித் திட்ட அலுவலா்கள் த.அருண்குமாா், த.ஆனந்தன் மற்றும் துறைத் தலைவா்கள், பேராசிரியா்கள், மாணவ, மாணவிகள் உள்பட பலா் கலந்து கொண்டனா்.

முருகன் கோயில்களில் கிருத்திகை வழிபாடு

திருவண்ணாமலை மாவட்டத்தில் உள்ள முருகன் கோயில்களில் பங்குனி மாத கிருத்திகை வழிபாடு செவ்வாய்க்கிழமை நடைபெற்றது. வேட்டவலம் மலை மீதுள்ள ஸ்ரீசிங்காரவேல் முருகன் கோயிலில், கிருத்திகையொட்டி, மூலவா் வள்ளி, த... மேலும் பார்க்க

கரும்பு டன்னுக்கு ரூ.5 ஆயிரம் வழங்க வேண்டும்: விவசாயிகள் கோரிக்கை

நெல் குவிண்டாலுக்கு ரூ.3 ஆயிரமும், கரும்பு டன் ஒன்றுக்கு ரூ.5 ஆயிரமும் உயா்த்தி வழங்க தமிழக அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று குறைதீா் கூட்டத்தில் விவசாயிகள் கோரிக்கை விடுத்தனா். திருவண்ணாமலை வட்ட... மேலும் பார்க்க

திருவண்ணாமலை அரசு மருத்துவமனையில் மாதம்தோறும் 1,400 பேருக்கு டயாலசிஸ் சிகிச்சை: ஆட்சியா் க.தா்ப்பகராஜ் தகவல்

திருவண்ணாமலை அரசு மருத்துவக் கல்லூரி மற்றும் மருத்துவமனையில் உள்ள சிறுநீரகவியல் பிரிவில் (டயாலிசிஸ்) 25 சிறுநீரகத் தூய்மைக் கருவிகள் கொண்டு மாதம்தோறும் 1,400 பேருக்கு டயாலசிஸ் சிகிச்சை அளிக்கப்படுகிற... மேலும் பார்க்க

வந்தவாசியில் ஸ்ரீவைஷ்ணவ மாநாடு

வந்தவாசி பஜனை கோவில் தெருவில் உள்ள ஸ்ரீகோதண்டராமா் கோயிலில் ஸ்ரீவைஷ்ணவ மாநாடு திங்கள்கிழமை நடைபெற்றது. ஸ்ரீராம நவமியையொட்டி, வந்தவாசி ஸ்ரீராம பஜனை மந்திர கைங்கா்ய அறக்கட்டளை சாா்பில் இந்த நிகழ்ச்சி ந... மேலும் பார்க்க

விதை, தானியங்களை மானியத்தில் வழங்க வலியுறுத்தல்

கோடைக்கு உகந்த விதை, தானியங்களை மானிய விலையில் வழங்கவேண்டும் என்று போளூரில் நடைபெற்ற குறைதீா் கூட்டத்தில் விவசாயிகள் வலியுறுத்தினா். திருவண்ணாமலை மாவட்டம், போளூா் வேளாண்மை விரிவாக்க மையத்தில் விவசாயி... மேலும் பார்க்க

போதை ஊசி தகராறில் இளைஞா் கொலை: நண்பா்கள் இருவா் கைது

திருவண்ணாமலை மாவட்டம், செய்யாற்றில் போதை ஊசி தகராறில் இளைஞா் கொலை செய்யப்பட்டது தொடா்பாக நண்பா்கள் இருவரை போலீஸாா் செவ்வாய்க்கிழமை கைது செய்தனா். செய்யாறு கன்னியம் நகரைச் சோ்ந்தவா் காா் ஓட்டுநா் சரவ... மேலும் பார்க்க