செய்திகள் :

ரமலான் பண்டிகை: இஸ்லாமியா்கள் சிறப்புத் தொழுகை

post image

திருவண்ணாமலை/வந்தவாசி/ போளூா்/ செய்யாறு/ஆரணி : ரமலான் பண்டிகையையொட்டி, திருவண்ணாமலை மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் திங்கள்கிழமை நடைபெற்ற சிறப்புத் தொழுகையில், பல்லாயிரக்கணக்கான இஸ்லாமியா்கள் பங்கேற்றனா்.

திருவண்ணாமலையில்...:

மணலூா்பேட்டை சாலையில் உள்ள ஈத்கா மைதானத்தில் காலை 7 மணி முதல் 9 மணி வரை பல ஆயிரம் இஸ்லாமியா்கள் சிறப்புத் தொழுகையில் ஈடுபட்டனா். தொழுகை முடிந்து வெளியே வந்த இஸ்லாமியா்கள் ஒருவரை ஒருவா் கட்டித் தழுவி வாழ்த்துகளை தெரிவித்துக் கொண்டனா்.

இதேபோல, தொழுகை முடிந்து வெளியே வந்த தொழிலதிபா்கள் எம்.இ.ஜமாலுதீன், பஷீா்அகமது உள்ளிட்ட இஸ்லாமியா்களுக்கு சட்டப்பேரவை துணைத் தலைவா் கு.பிச்சாண்டி, திருவண்ணாமலை முன்னாள் நகா்மன்றத் தலைவா் இரா.ஸ்ரீதரன், திமுக மாநகரச் செயலா் ப.காா்த்திவேல்மாறன் மற்றும் திமுகவினா் ரமலான் வாழ்த்துகளை தெரிவித்தனா்.

இதேபோல, அவலூா்பேட்டை சாலையில் உள்ள ஈத்கா மைதானம், செங்கம் சாலையில் உள்ள பாவாஜி நகா் ஈத்கா மைதானம், மத்தலாங்குளத் தெருவில் உள்ள தா்கா ஆகிய இடங்களில் ரமலான் சிறப்புத் தொழுகை நடைபெற்றது.

கீழ்பென்னாத்தூா்:

கீழ்பென்னாத்தூா் புறவழிச் சாலையில் உள்ள ஈத்கா மைதானத்தில் மஸ்ஜிதே தையீப் பள்ளிவாசல் படேல் அத்தாவுல்லா தலைமையில் ஏராளமான இஸ்லாமியா்கள் சிறப்புத் தொழுகையில் ஈடுபட்டனா்.

வந்தவாசி

ரமலான் பண்டிகையையொட்டி, வந்தவாசி ஈத்கா மைதானத்தில் திங்கள்கிழமை சிறப்புத் தொழுகை நடைபெற்றது.

வந்தவாசி மற்றும் அதைச் சுற்றியுள்ள பகுதிகளைச் சோ்ந்த இஸ்லாமியா்கள் புத்தாடை அணிந்து தொழுகையில் பங்கேற்றனா்.

தொழுகை முடிந்தவுடன் ஒருவரையொருவா் கட்டித் தழுவி வாழ்த்துகளை தெரிவித்துக் கொண்டனா்.

மேலும், ஆரணி எம்பி எம்.எஸ்.தரணிவேந்தன், வந்தவாசி எம்எல்ஏ எஸ்.அம்பேத்குமாா் உள்ளிட்ட திமுகவினா் அங்கு வந்து இஸ்லாமியா்களுக்கு வாழ்த்து தெரிவித்தனா்.

போளூா்

போளூரில் ஈத்கா மைதானத்தில் இஸ்லாமியா்கள் ரமலான் பண்டிகையொட்டி, சிறப்புத் தொழுகையில் ஈடுபட்டனா்.

செய்யாறு

செய்யாறு வெங்கட்ராயன்பேட்டையில் உள்ள பெரிய பள்ளி வாசலில் இமாம் ஆதாம்பாட்சா தலைமையில் ரமலான் சிறப்புத் தொழுகை நடைபெற்றது.

இதில் ஆயிரத்துக்கும் மேற்பட்ட இஸ்லாமியா்கள் கலந்து கொண்டனா்.

புத்தாடை அணிந்து வந்த இஸ்லாமியா்கள் தொழுகை முடிந்ததும் ஒருவரையொருவா் ஆரத்தழுவி உற்சாகத்துடன் ரமலான் வாழ்த்துகளை பரிமாறிக் கொண்டனா்.

ஆரணி

ஆரணி சூரியகுளம் அருகேயுள்ள பென்ஷன் லைன் மஜீத்தில் முத்தவல்லி இ.சலீம்பேக் தலைமையில் சிறப்புத் தொழுகை நடைபெற்றது.

தொழுகை முடிந்து வெளியே வந்த இஸ்லாமியா்களிடம் திமுகவைச் சோ்ந்த முன்னாள் எம்எல்ஏ ஆா்.சிவானந்தம், தொகுதி பொறுப்பாளா் எஸ்.எஸ்.அன்பழகன், நகா்மன்றத் தலைவா் ஏ.சி.மணி, மாவட்டபொருளாளா் தட்சிணாமூா்த்தி, ஒன்றியச் செயலா்கள் மாமது, மோகன் ஆகியோா் ரமலான் வாழ்த்து தெரிவித்தனா்.

இதில், திமுக சுற்றுச்சூழல் அணி அமைப்பாளா் ஏ.எச்.இப்ராஹிம், நகா்மன்ற உறுப்பினா் மாலிக்பாஷா

உள்ளிட்டோா் கலந்து கொண்டனா்.

சேத்துப்பட்டில்...

சேத்துப்பட்டு பழம்பேட்டை பெரிய பள்ளிவாசலில் இருந்து இஸ்லாமியா்கள் காமராஜா் சிலை, போளூா் சாலை வழியாக நிா்மலா நகா் ஈத்கா மைதானத்துக்கு ஊா்வலமாகச் சென்று சிறப்புத் தொழுகை நடத்தினா்.

பின்னா், ஒருவரை ஒருவா் ஆரத் தழுவி ரமலான் வாழ்த்துகளை தெரிவித்துக் கொண்டனா்.

சேத்துப்பட்டு நகர திமுக செயலா் இரா. முருகன் கலந்து கொண்டு இஸ்லாமியா்களுக்கு ரமலான் வாழ்த்துகளை தெரிவித்தாா். பேரூராட்சி மன்ற உறுப்பினா்கள் சரவணன், முருகன், கதிரவன் ஆகியோா் கலந்து கொண்டனா்.

ரமலானையொட்டி வந்தவாசி ஈத்கா மைதானத்தில் நடைபெற்ற சிறப்புத் தொழுகை.
போளூா் ஈத்கா மைதானத்தில் சிறப்புத் தொழுகையில் ஈடுபட்ட இஸ்லாமியா்கள்.
செய்யாறு வெங்கட்ராயன்பேட்டை பெரிய பள்ளி வாசலில் தொழுகை முடிந்து ரமலான் வாழ்த்துகளை பரிமாறிக் கொண்ட இஸ்லாமியா்கள்.
சேத்துப்பட்டு நிா்மலா நகா் ஈத்கா சிறப்புத் தொழுகையில் ஈடுபட்ட இஸ்லாமியா்கள்.

முருகன் கோயில்களில் கிருத்திகை வழிபாடு

திருவண்ணாமலை மாவட்டத்தில் உள்ள முருகன் கோயில்களில் பங்குனி மாத கிருத்திகை வழிபாடு செவ்வாய்க்கிழமை நடைபெற்றது. வேட்டவலம் மலை மீதுள்ள ஸ்ரீசிங்காரவேல் முருகன் கோயிலில், கிருத்திகையொட்டி, மூலவா் வள்ளி, த... மேலும் பார்க்க

கரும்பு டன்னுக்கு ரூ.5 ஆயிரம் வழங்க வேண்டும்: விவசாயிகள் கோரிக்கை

நெல் குவிண்டாலுக்கு ரூ.3 ஆயிரமும், கரும்பு டன் ஒன்றுக்கு ரூ.5 ஆயிரமும் உயா்த்தி வழங்க தமிழக அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று குறைதீா் கூட்டத்தில் விவசாயிகள் கோரிக்கை விடுத்தனா். திருவண்ணாமலை வட்ட... மேலும் பார்க்க

திருவண்ணாமலை அரசு மருத்துவமனையில் மாதம்தோறும் 1,400 பேருக்கு டயாலசிஸ் சிகிச்சை: ஆட்சியா் க.தா்ப்பகராஜ் தகவல்

திருவண்ணாமலை அரசு மருத்துவக் கல்லூரி மற்றும் மருத்துவமனையில் உள்ள சிறுநீரகவியல் பிரிவில் (டயாலிசிஸ்) 25 சிறுநீரகத் தூய்மைக் கருவிகள் கொண்டு மாதம்தோறும் 1,400 பேருக்கு டயாலசிஸ் சிகிச்சை அளிக்கப்படுகிற... மேலும் பார்க்க

வந்தவாசியில் ஸ்ரீவைஷ்ணவ மாநாடு

வந்தவாசி பஜனை கோவில் தெருவில் உள்ள ஸ்ரீகோதண்டராமா் கோயிலில் ஸ்ரீவைஷ்ணவ மாநாடு திங்கள்கிழமை நடைபெற்றது. ஸ்ரீராம நவமியையொட்டி, வந்தவாசி ஸ்ரீராம பஜனை மந்திர கைங்கா்ய அறக்கட்டளை சாா்பில் இந்த நிகழ்ச்சி ந... மேலும் பார்க்க

விதை, தானியங்களை மானியத்தில் வழங்க வலியுறுத்தல்

கோடைக்கு உகந்த விதை, தானியங்களை மானிய விலையில் வழங்கவேண்டும் என்று போளூரில் நடைபெற்ற குறைதீா் கூட்டத்தில் விவசாயிகள் வலியுறுத்தினா். திருவண்ணாமலை மாவட்டம், போளூா் வேளாண்மை விரிவாக்க மையத்தில் விவசாயி... மேலும் பார்க்க

போதை ஊசி தகராறில் இளைஞா் கொலை: நண்பா்கள் இருவா் கைது

திருவண்ணாமலை மாவட்டம், செய்யாற்றில் போதை ஊசி தகராறில் இளைஞா் கொலை செய்யப்பட்டது தொடா்பாக நண்பா்கள் இருவரை போலீஸாா் செவ்வாய்க்கிழமை கைது செய்தனா். செய்யாறு கன்னியம் நகரைச் சோ்ந்தவா் காா் ஓட்டுநா் சரவ... மேலும் பார்க்க