செய்திகள் :

"19 மாணவச் செல்வங்களின் உயிர்களுக்கு பதில் என்ன?" - தனுஷ் டு தர்ஷினி நீட் மரணங்கள் - இபிஸ் கேள்வி!

post image

நீட் தேர்வு பயத்தினால் தற்கொலை செய்துகொண்ட தேவதர்ஷினி குறித்து தனது எக்ஸ் தளத்தில் தமிழ்நாடு எதிர்க்கட்சி தலைவர் எடப்பாடி பழனிசாமி பதிவிட்டிருக்கிறார்.

அதில், "நீட் தேர்வு அச்சத்தால் சென்னையில் தர்ஷினி என்ற மாணவி தன் இன்னுயிரை மாய்த்துக்கொண்டதாக வரும் செய்தி அதிர்ச்சியளிக்கிறது.

நீட் என்ற தேர்வை நாட்டிற்கே அறிமுகப்படுத்தி, கூட்டணி கட்சியுடன் சேர்ந்து அதனை உச்சநீதிமன்றம் வரை சென்று வாதாடி, தமிழ்நாடு மாணவர்களின் மருத்துவக் கனவை சிதைத்திட அடித்தளம் இட்டதோடு அல்லாமல், "ஆட்சிக்கு வந்தால் நீட் என்ற தேர்வே தமிழ்நாட்டில் இருக்காது" என்று பச்சைப் பொய் சொல்லி ஏமாற்றிய திமுக-விற்கு தொடரும் நீட் மரணங்கள் மனசாட்சியை உறுத்தவில்லையா?

எடப்பாடி அடுக்கும் கேள்விகள்
எடப்பாடி அடுக்கும் கேள்விகள்

19 உயிர்களுக்கு பதில் என்ன?

செப் 2021- தனுஷ், சௌந்தர்யா, கனிமொழி

அக் 2021- அனு, கீர்த்திவாசன்

நவ 2021- சுபாஷ் சந்திரபோஸ்

ஜூன் 2022- தனுஷ்

ஜூலை 2022- முரளி கிருஷ்ணா, நிஷாந்தி

ஆகஸ்ட் 2022- ப்ரீத்தி ஸ்ரீ

செப் 2022- லஷ்மண ஸ்வேதா, ராஜலட்சுமி

மார்ச் 2023- சந்துரு

ஏப்ரல் 2023- நிஷா

ஆகஸ்ட் 2023- ஜெகதீசன்

டிசம்பர் 2023- ஆகாஷ்

அக்டோபர் 2024- புனிதா

மார்ச் 2025- இந்து, தர்ஷினி

இந்த 19 மாணவச் செல்வங்களின் உயிர்களுக்கும் திரு.ஸ்டாலின் சொல்லப்போகும் பதில் என்ன?

உதயநிதி ஸ்டாலினின் நீட் ஒழிப்பு ரகசியம் வெளிவர இன்னும் எத்தனை உயிர்கள் போக வேண்டும்? தேர்தல் ஆதாயத்திற்காக சொன்ன பெரும் பொய்யால் உங்கள் கைகளில் சேர்ந்துகொண்டே இருக்கும் இரத்தக் கறைகளை எப்படி துடைக்கப் போகிறீர்கள்?

முழு பொறுப்பு!

மாணவி தர்ஷினி மரணத்திற்கு ஸ்டாலின் மாடல் திமுக அரசே முழு பொறுப்பு! எனவே, நீட் தேர்வு நாடகத்திற்கு ஒரு முற்றுப்புள்ளி வையுங்கள்! மாணவர்களை ஏமாற்றாதீர்கள் திரு.ஸ்டாலின்!

மாணவச் செல்வங்களே- எதற்காகவும் உங்கள் இன்னுயிரை இழக்கத் துணியாதீர்கள். வாழ்க்கை பெரிது; உலகம் பெரிது! வாழ்ந்து சாதிக்க வேண்டுமே தவிர, செத்து வீழக் கூடாது. "நாம் நிச்சயம் வெற்றி பெறுவோம்" என்ற நம்பிக்கையோடு எப்போதும் முன் செல்லுங்கள். வெற்றி நிச்சயம் உங்களை வந்து கெஞ்சும்! #நீட்ரகசியம் திமுக_சதுரங்கவேட்டை" என்று குறிப்பிடப்பட்டுள்ளது.

Waqf Bill: "இஸ்லாமியர் சொத்துக்களை அபகரிக்கும் முயற்சி" - நாடாளுமன்றத்தில் ஆ.ராசா பேச்சு

வக்ஃப் சட்டத் திருத்த மசோதா மீதான விவாதம் நாடாளுமன்றத்தில் நடைபெற்று வருகிறது. வக்ஃப் சட்டத் திருத்த நாடாளுமன்ற கூட்டுக்குழுவில் இடம்பெற்றிருந்த திமுக எம்.பி ஆ.ராசா, சட்டத் திருத்த மசோதாவில் கூறப்பட்ட... மேலும் பார்க்க

'அவரைக் கூப்பிடாதீங்க'னு எல்லார்கிட்டயும் சொல்லியிருக்காராம்’ - தாடி பாலாஜி vs தவெக பஞ்சாயத்து

ஆரம்பத்தில் திமுக அனுதாபியாக இருந்தவர் நடிகர் தாடி பாலாஜி. விஜய் தமிழகவெற்றி கழகத்தைத் தொடங்கியதும்,அதில்சேர ஆர்வம் காட்டி வந்தார். கள்ளக்குறிச்சியில் நடந்த தவெக-வின் முதல் மாநாட்டில் கலந்து கொண்டார்.... மேலும் பார்க்க

`என் சிறுநீரகம் ரூ.75000, கல்லீரல் ரூ.90000'- கடனை அடைக்க உறுப்புகளை விற்கப்போவதாக விவசாயி போராட்டம்

மகாராஷ்டிராவில் கடன் தொல்லையால் விவசாயிகள் தற்கொலை செய்து வருகின்றனர். நாட்டிலேயே அதிக விவசாயிகள் தற்கொலை செய்யும் மாநிலமாக மகாராஷ்டிரா இருக்கிறது. சட்டமன்றத் தேர்தலுக்கு முன்பு விவசாயிகளின் கடன் தள்ள... மேலும் பார்க்க

Waqf : `மத நல்லிணக்கத்துக்கு அச்சுறுத்தல்’ - வக்ஃப் மசோதா விவகாரத்தில் பிரதமருக்கு முதல்வர் கடிதம்

வக்ஃப் சட்டதிருத்த மசோதா இன்று நாடாளுமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்டு, அதன் மீதான விவாதம் நடைபெற்று வருகிறது. இதற்கு இந்தியா கூட்டணி கட்சிகள் ஓரணியாக எதிர்ப்பு தெரிவித்துள்ளனர். இந்த சட்டதிருத்த மசோதாவ... மேலும் பார்க்க

Wakf Amendment Bill : `நாடாளுமன்ற கூட்டுக்குழு நீங்க தானே கேட்டீங்க?’ - அமித் ஷா காட்டம்

வக்பு திருத்த மசோதா மக்களவையில் இன்று மதியம் 12 மணிக்கு தாக்கல் செய்யப்பட்டிருக்கிறது. இந்த மசோதா மீது 8 மணி நேரம் விவாதம் நடத்தப்படும் என்றும், சூழலைப் பொறுத்து கூடுதல் நேரம் விவாதிக்கப்படும் என்றும்... மேலும் பார்க்க

கச்சத்தீவு : ஒருமனதாக நிறைவேறிய தீர்மானம்... ஆனாலும் அனல் பறந்த விவாதம் - நடந்தது என்ன?

தமிழக சட்டமன்றத்தில் நெடுநாள் பிரச்னையான கச்சத்தீவு விவகாரத்தில் முதலமைச்சரின் தனித் தீர்மானம் இன்று ஒரு மனதாக நிறைவேற்றப்பட்டது. தீர்மானதுக்கு பாஜக சார்பில் எம்.எல்.ஏ வானதி சீனிவாசன் ஆதரவு தெரிவித்து... மேலும் பார்க்க