தமிழகத்தில் ரூ. 500 கோடிக்கு வருமான வரி மோசடி!
தமிழகத்தில் சுமார் 22,500 பேர் வரி ஏய்ப்பில் ஈடுபட்டிருப்பதாக வருமான வரித் துறை கூறியுள்ளது.
தமிழகத்தில் மத்திய, மாநில அரசு பொதுத்துறை நிறுவனங்கள் மற்றும் பல்வேறு தனியார் நிறுவனங்களைச் சேர்ந்த 22,500 பேர்வரையில், வருமான வரிக் கணக்கில் மோசடி செய்துள்ளதாக வருமான வரித் துறை தெரிவித்துள்ளது.
போலியான ஐடி ரிட்டர்ன் தாக்கல் (ITR) மற்றும் போலியான ஆவணங்களையும் சமர்ப்பித்து, ரூ. 500 கோடிக்கு வருமான வரி மோசடியில் ஈடுபட்டது தெரிய வந்துள்ளது.
இதனையடுத்து, பொதுத்துறை, தனியார் ஊழியர்களின் வருமான வரி கணக்கு தாக்கல் தொடர்பாக விசாரணை மேற்கொள்ளப்பட்டு வருவதாக வருமான வரித்துறையினர் தெரிவித்தனர்.
இதையும் படிக்க:நூறு நாள் வேலைத் திட்டத்தில் மோசடி: திமுக மீது அண்ணாமலை குற்றச்சாட்டு!