2-ஆவது நிமிஷத்தில் கோல் அடித்த மெஸ்ஸி..! ஜோகோவிச்சுக்கு சமர்ப்பணம்!
அமெரிக்காவில் நடைபெறும் எம்எல்எஸ் கால்பந்து தொடரில் இன்டர் மியாமி அணி 2-1 என வெற்றி பெற்றது.
அமெரிக்காவின் புளோரிடாவில் உள்ள சேஷ் திடலில் இந்தப் போட்டி நடைபெற்றது.
எம்எல்எஸ் கால்பந்து தொடரின் முதல் சுற்றின் 2ஆவது லெக் போட்டியில் இன்டர் மியாமி அணி பிலடெல்பியாவுடன் மோதியது.
இந்தப் போட்டியில் இன்டர் மியாமியின் ராபர்ட் டெய்லர் 23ஆவது நிமிஷத்தில் முதல் கோல் அடித்தார்.
855ஆவது கோல்
பின்னர் இரண்டாம் பாதியில் மெஸ்ஸி 55ஆவது நிமிஷத்தில் ஆட்டத்தில் சேர்க்கப்பட்டார்.
மெஸ்ஸி களமிறங்கிய 2ஆவது நிமிஷத்தில் லூயிஸ் சௌரஸ் பாஸ் செய்த பந்தினை லாவகமாக எதிரணியினரின் டிஃபென்டர்களை தாண்டி தனது வலது காலினால் மெஸ்ஸி கோல் அடித்தார்.
இதன்மூலம் தனது 855ஆவது கோலை மெஸ்ஸி நிறைவு செய்துள்ளார்.
இறுதியில் இன்டர் மியாமி அணி 2-1 என வென்றது. மேலும் புள்ளிப் பட்டியலில் முதலிடத்தையும் பிடித்தது.
55' - Messi subs on
— Major League Soccer (@MLS) March 30, 2025
57' - Messi scores
Inevitable. pic.twitter.com/JyBC0QWgr5
ஜோகோவிச்சுக்கு சமர்ப்பணம்
மியாமி அரையிறுதிப் போட்டியின்போது மெஸ்ஸி போட்டியை காண்பதற்காக சென்றிருந்தார்.
அரையிறுதியில் வென்ற ஜோகோவிச் பின்னர் மெஸ்ஸியை சந்தித்து பேசினார். பின்னர் இருவரும் தங்களது ஜெர்சிகளை பகிர்ந்து கொண்டனர்.
இந்நிலையில் கோல் அடித்த மகிழ்ச்சியில் ஜோகோவிச்சுக்கு சமர்ப்பணம் செய்வதை மெஸ்ஸி அவரைப் போலவே விளையாடி காண்பித்தார்.
இது டென்னிஸ் ரசிகர்கள் மத்தியில் வரவேற்பை பெற்று வருகிறது.
Leo Messi dedicates his goal to Novak Djokovic with this forehand shot.
— Danny (@DjokovicFan_) March 30, 2025
Two legends with mutual respect. pic.twitter.com/zn1fR55kht