ஆண்டனியை தக்கவைக்க நன்கொடை வேண்டும்..! வரலாற்று வெற்றிக்குப் பின் பேசிய இஸ்கோ!
பிரேசிலைச் சேர்ந்த கால்பந்து வீரர் ஆண்டனி தற்போது லா லீகா தொடரில் ரியல் பெட்டிஸ் அணிக்காக விளையாடி வருகிறார்.
4 மாதங்களுக்கு முன்பாக மிகவும் கிண்டல் செய்யப்பட்ட ஆண்டனியை தற்போது உலகமே அவரைப் புகழ்ந்து வருகிறது.
ரியல் பெட்டிஸ் அணியில் ஆண்டனி இணைந்த பிறகு அந்த அணி தொடர்ச்சியாக வென்று வருகிறது.
நேற்று செவில்லாவுடன் மோதிய ரியல் பெட்டிஸ் 2-1 என வென்றது. 7 ஆண்டுகளுக்குப் பிறகு ரியல் பெட்டிஸ் வென்றதால் வீரர்கள் ஆக்ரோஷமாக கொண்டாடினார்கள்.
இந்தப் புகைப்படங்கள், விடியோக்கள் வைரலாகி வருகின்றன.
லோனில் வாங்கப்பட்ட ஆண்டனி
மான்செஸ்டர் யுனைடெட் அணியில் 100 மில்லியன் யூரோவுக்கு வாங்கப்பட்ட ஆண்டனி மோசமாக விளையாடியதால் அவரை லோன் அடிப்படையில் ரியல் பெட்டிஸ் அணிக்கு விற்றது.
தற்போது சிறப்பாக விளையாடிவரும் ஆண்டனியை ரியல் பெட்டிஸ் அணியினர் இன்னும் கூடுதலாக ஓராண்டு இருக்கும்படி விரும்புகின்றனர்.
நன்கொடை வசூலிக்க விரும்பும் ரியல் பெட்டிஸ்
ரியல் பெட்டிஸ் அணி வீரர் இஸ்கோ கூறியதாவது:
இன்னொரு ஆண்டும் எங்களுக்காக ஆண்டனி விளையாட நாங்கள் மக்களிடம் நன்கொடை கேட்கலாம் என்றிருக்கிறோம். அவரது தன்னடக்கம், மற்றவர்களுக்கு உதவ வேண்டுமென்ற எண்ணத்தினால் எங்களை ஆச்சரியத்தில் ஆழ்த்தியுள்ளார் என்றார்.
ரியல் பெட்டிஸ் கிளப்பை நேசிக்கிறேன்
இதற்கு பதிலளித்த ஆண்டனி, “இஸ்கோ திறமைசாளி. அவர் மிகச் சிறப்பான வீரர் மட்டுமல்ல சிறப்பான மனிதரும். எப்படி ஒரு விஷயம் நடைபெறுகிறதென புரிந்தால் அதைச் செய்வது எளிது.
நான் இந்த கிளப்பில் நன்றாக விளையாடுகிறேன்.நான் என்னை இங்குதான் கண்டறிந்தேன். அதனால் மிகவும் மகிழ்ச்சியாக இருக்கிறேன். இந்த அணியை, இந்த நகரத்தை, அனைத்தையும் தினமும் நேசிக்கிறேன்.” என்றார்.
25 வயதாகும் ஆண்டனி ரியல் பெட்டிஸ் அணியில் 4 கோல்கள், 4 அசிஸ்ட்ஸ், 1 பெனால்டி வெற்றி, 13 டிரிப்ள்ஸ், 28 வாய்ப்பை உருவாக்குதல், சாராசரியாக 12 போட்டிகளுக்கும் சேர்த்து 7.8 ரேட்டிங்கையும் பெற்றுள்ளார்.
அடுத்த என்னவாகும்?
மான்செஸ்டர் யுனைடெட் 2027 வரை ஆண்டனியின் ஒப்பந்தத்தை வைத்துள்ளது. அதனால், இந்த கோடைக்காலத்தில் மிகப்பெரிய முடிவினை எடுத்தாக வேண்டும். ரியல் பெட்டிஸ் மீண்டும் ஒரு லோன் ஒப்பந்தத்தினை யுனைடெட் அணியுடன் மேற்கோள்ள ஆவலுடன் இருக்கிறது.
ஜெர்மனி ஜெயண்ட்ஸ் எனப்படும் பெயர்ன் மியூனிக் அணியும் ஆண்டனியை வாங்க விருப்பம் தெரிவித்துள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
இஸ்கோ கூறியதுபோல் மக்களிடம் நன்கொடை பெற்றால் மட்டுமே அவர் மீண்டும் ரியல் பெட்டிஸ் அணியில் விளையாட முடியுமென எதிர்பார்க்கப்படுகிறது.
⬜️⬜️
— Real Betis Balompié (@RealBetis) March 31, 2025
Vuestro aliento, nuestra fuerza.
Forza Betis, Alé. pic.twitter.com/gG32Ochw8y