ஆட்சிக் கவிழ்ப்பின்போது கைதான முக்கிய அதிகாரிகளை விடுவித்த நைஜர் ராணுவ அரசு!
மிகப்பெரிய தொகைக்கு விற்கப்பட்ட ஜன நாயகன் ஓடிடி உரிமம்!
நடிகர் விஜய் நடித்துவரும் ஜன நாயகன் படத்தின் ஓடிடி உரிமம் குறித்து தகவல் வெளியாகியுள்ளது.
நடிகர் விஜய் நடிப்பில் உருவாகும் 69-வது படத்தினை எச். வினோத் இயக்குகிறார். இதுதான் விஜய்யின் கடைசி படம் என அறிவித்துள்ளதால் மிகுந்த எதிர்பார்ப்புகளுக்கு மத்தியில் இப்படம் உருவாகி வருகிறது.
படத்தின் போஸ்டர்கள் வெளியாகி கவனம் பெற்ற நிலையில், நடிகை ஸ்ருதி ஹாசன் இப்படத்தில் இணைய உள்ளதாகக் கூறப்பட்டது.
அண்மையில், பொங்கல் வெளியீடாக இப்படத்தை 2026 ஜனவரி 9 ஆம் தேதி வெளியிட உள்ளதாகத் தயாரிப்பு நிறுவனம் அதிகாரப்பூர்வமாக அறிவித்திருந்தது.
மேலும், தமிழ் புத்தாண்டான ஏப். 14 ஆம் தேதி அன்று இப்படத்தின் சிறப்பு கிளிம்ஸ் விடியோவை வெளியிட திட்டமிட்டுள்ளதாகக் கூறப்படுகிறது.
இந்த நிலையில், ஜன நாயகன் படத்தின் ஓடிடி உரிமத்தை அமேசான் பிரைம் நிறுவனம் ரூ. 121 கோடிக்கு பெற்றதாகவும் படம் வெளியாகி 8 வாரங்கள் கழித்தே ஓடிடிக்கு வரும் என்றும் தகவல்கள் தெரிவிக்கின்றன.
இதையும் படிக்க: ஆண்களே, அழிஞ்சு நாசமா போங்க! கொந்தளித்த சின்மயி!