3 மத்திய ஆசிய நாடுகளுக்கு இடையே ஒப்பந்தம்! ஐக்கிய அரபு அமீரகம் வரவேற்பு!
திருச்செந்தூர் கோயிலில் வாரத்தில் 3 நாள்களுக்கு சிறப்பு தரிசனம் ரத்து!
கோடை விடுமுறையை முன்னிட்டு, திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோயிலில் பக்தர்களின் வசதிக்காக, வாரத்தில் 3 நாள்களுக்கு சிறப்பு தரிசனம் ரத்து செய்யப்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
அதாவது, வாரத்தில் ஞாயிறு, செவ்வாய், வியாழக் கிழமைகளில் திருச்செந்தூர் கோயிலில் சிறப்பு தரிசனம் கிடையாது என தெரிவிக்கப்பட்டுள்ளது.
கோடை காலம் என்பதால், கோயிலுக்கு ஏராளமான பக்தர்கள் வருகை தருவார்கள் என்பதாலும், கோடையில் பக்தர்கள் நீண்ட நேரம் வரிசையில் காத்திருப்பதை தவிர்க்க வேண்டியும், சிறப்பு தரிசனத்தை ரத்து செய்துள்ளதாக திருச்செந்தூர் கோயில் நிர்வாகம் சார்பில் தெரிவித்துள்ளது.
கடந்த மாதம், திருச்செந்தூர் கோயிலில், கூட்ட நெரிசலில், நீண்ட நேரம் வரிசையில் காத்திருந்த பக்தர் ஒருவர் பலியான நிலையில், பக்தர்களின் நலன் கருதி பல்வேறு முடிவுகளை கோயில் நிர்வாகம் எடுத்து வருகிறது. அதன் ஒருபடியாகவே இதுவும் திட்டமிடப்பட்டுள்ளது.