எதிரணிக்கு சாதகம்: பிட்ச் மேற்பார்வையாளரை குற்றம் சுமத்தும் லக்னௌ ஆலோசகர்!
ஆண்களே, அழிஞ்சு நாசமா போங்க! கொந்தளித்த சின்மயி!
சின்னத்திரை நடிகையின் அந்தரங்க விடியோ சர்ச்சையில் பாடகி சின்மயி கடுமையாக எதிர்வினையாற்றியுள்ளார்.
விஜய் டிவியில் ஒளிபரப்பாகும் பிரபல சின்னத்திரை தொடரில் நடித்து வரும் இளம் நடிகையொருவர் சினிமா வாய்ப்புக்காக ஒருவரிடம் அந்தரங்கமாக பேசிக்கொண்டிருக்கும் விடியோ சில நாள்களுக்கு முன் வெளியாகி அதிர்ச்சியை ஏற்படுத்தியது.
இந்த நிலையில், பாடகி சின்மயி இச்சம்பவம் குறித்து கருத்து தெரிவித்துள்ளார். அவர் வெளியிட்ட பதிவில், “இளம் நடிகையின் அந்தரங்க விடியோவை வெளியிட்டதும் அதைப்பகிர்வதும் ஆண்கள்தானே. தமிழக ஆண்கள் லஞ்சம் வாங்குவதும் குற்றம் கொடுப்பதும் குற்றம் என்கின்றனர். ஆனால், இந்த நாட்டில் லஞ்சம் இல்லாமல் எதையும் சாதிக்க முடியாது என்பது பற்றி யாரும் பேசுவதில்லை.
பெண் சமரசம் செய்யாததால் வேலையை இழந்திருக்கலாம் என்று இப்போது ஆண்கள் புலம்பிக் கொண்டிருக்கிறார்கள் (திடீரென்று நீதி பற்றிய பேச்சு மற்றும் பல புலம்பல்கள்) - நியாயமான கருத்து, நானும் ஒப்புக்கொள்கிறேன். ஆனால், யாருமே தன்னிடம் வேலை செய்யும் பெண்ணிடம் பாலியல் தேவைகளைக் கேட்கும் அருவருப்பான மாசிசத்தைப் பற்றி பேசவில்லை. இப்படியானவர்கள் தொடர்ச்சியாக இதைத்தான் செய்துகொண்டிருக்கின்றனர். இருந்தாலும் மக்களால் கொண்டாடப்படுகிறார்கள். ஆனால், பெண் தன்னை தொடர்ந்து அழித்துக் கொள்ள வேண்டியிருக்கிறது?
அப்படிப்பட்ட ஆண்கள் விரும்பினால், வெளிப்படையாக விபச்சார புரோக்கர்களாக மாற வேண்டும். இந்த நாட்டில் அதற்கு பஞ்சமில்லை. ஏராளமான வேலை வாய்ப்புகள் உள்ளன. இங்கு பெண்களும் சிறுமிகளும் வெளிப்படையாகவே வியாபாரத்திற்குக் கடத்தப்படுகிறார்கள், விநியோகிக்கப்படுகிறார்கள், சத்தமின்றி கொல்லப்படுகிறார்கள்.
A young TV actress’ videos / photos were ‘leaked’ - mostly shared by the men in question. Men on Twitter shared asking other men to DM for the link.
— Chinmayi Sripaada (@Chinmayi) March 31, 2025
Of course men in Tamilnadu are saying lanjam vaanguvadhu thappu koduppadhu thappu - (It is a crime to ask and give bribes). Nobody…
இப்படிப்பட்ட எண்ணங்களைக் கொண்ட ஆண்கள் கலை, தொலைக்காட்சி, ஊடகம் மற்றும் திரைப்படங்களில் இருந்து விலகி இருக்க வேண்டும் என்று நான் பரிந்துரைக்கிறேன். இதனால், கலையைச் சமூகத்திற்கும் நம் குழந்தைகளுக்கும் பாதுகாப்பாக வைத்திருக்க உதவலாம்.
நடிகைகளிடம் பாலியல் உதவிகளைக் கேட்ட ஆண்கள் தங்கள் குடும்பங்களுக்குள் 'மரியாதைக்குரிய' இடங்களில் இருக்கின்றனாரா? அந்த விடியோவுக்கு பின்னால் இருந்த ஆண்கள் யார்?
So one bast*rd decided to leak an intimate meant ONLY for him and other Bast*rds are asking for a link?
— Chinmayi Sripaada (@Chinmayi) March 26, 2025
OK.
Not surprising in Penniyam pesum murpokku country.
Athana perum nasama ponga azhinju ponga veroda ungala ippidi valathavangaloda kattaila ponga.
ஒரு இழிமகன் எடுத்த விடியோவையும் அதற்கான லிங்க்கையும் பல இழிமகன்கள் கேட்டுக்கொண்டிருக்கிறார்களா? சரி. பெண்ணியம் பேசும் முற்போக்கு நாட்டில் ஆச்சரியப்படுவதற்கில்லை. அத்தனை பேரும் நாசமா போங்க, அழிஞ்சு போங்க, உங்களை இப்படி வளர்த்தவங்களோட கட்டைல போங்க.” என மிகக் கடுமையாகத் தன் கருத்துகளைத் தெரிவித்துள்ளார்.
இதையும் படிக்க: சர்ச்சைகளுக்கு மத்தியில் எம்புரான் ரூ.200 கோடி வசூல்!