ஆட்சிக் கவிழ்ப்பின்போது கைதான முக்கிய அதிகாரிகளை விடுவித்த நைஜர் ராணுவ அரசு!
வின்டேஜ் சியான்! வீர தீர சூரனுக்கு நன்றி: துருவ் விக்ரம்
நடிகர் விக்ரமுடனான புகைப்படத்தைப் பகிர்ந்து மகிழ்ச்சியடைந்துள்ளார் துருவ் விக்ரம்.
விக்ரம் - அருண் குமார் கூட்டணியில் உருவான வீர தீர சூரன் திரைப்படம் கடந்த வியாழக்கிழமை திரையரங்குகளில் வெளியானது. அதிரடியான ஆக்சன் படமான இது ரசிகர்களிடம் வரவேற்பைப் பெற்றதுடன் வணிக ரீதியாகவும் வெற்றியை நோக்கி நகர்ந்துள்ளது.
முக்கியமாக, கடந்த 10 ஆண்டுகளில் வெளியான விக்ரம் படங்களிலேயே ரசிகர்களைக் கவர்ந்ததுடன் விக்ரமுக்கும் திருப்புமுனையான படம் என்றே அவரின் ரசிகர்கள் கருதுகின்றனர்.
இந்த நிலையில், நடிகரும் விக்ரமின் மகனுமான துருவ் விக்ரம் தன் தந்தையுடான பழைய புகைப்படத்தைப் பகிர்ந்து, ‘வின்டேஜ் சியான்... வீர தீர சூரனுக்கு நன்றி அருண்குமார் சார்.” என நெகிழ்ச்சியடைந்துள்ளார்.
இதையும் படிக்க: ஆண்களே, அழிஞ்சு நாசமா போங்க! கொந்தளித்த சின்மயி!