செய்திகள் :

தயாரிப்பில் கவனம் செலுத்தும் லைகா!

post image

பிரபல திரைப்பட தயாரிப்பு நிறுவனமான லைகா திரைப்பட தயாரிப்பிலில் கவனம் செலுத்த உள்ளதாகத் தகவல்.

தமிழின் முன்னணி தயாரிப்பு நிறுவனமான லைகா புரடக்‌ஷன்ஸ் நடிகர் விஜய்யின் கத்தி திரைப்படத்தின் மூலம் சினிமா தயாரிப்புக்குள் நுழைந்தது. தொடர்ந்து, லைகாவின் பெயர் கவனம் பெற அடுத்தடுத்த படங்களைத் தயாரிக்கத் தொடங்கினர்.

லைகா தயாரித்ததில் ரஜினியின் 2.0, செக்கச் சிவந்த வானம், டான், பொன்னியின் செல்வன் 1 & 2 ஆகிய படங்கள் நல்ல லாபத்தை ஈட்டிக்கொடுத்தன.

ஆனால், சில ஆண்டுகளுக்கு முன் தமிழ் சினிமாவில் பிரம்மாண்ட படங்களைத் தயாரித்து வெற்றி பெற்ற லைகாவுக்கு லால் சலாம், சந்திரமுகி - 2, இந்தியன் - 2 ஆகிய படங்கள் தோல்வியைக் கொடுத்ததுடன் வேட்டையன், விடாமுயற்சி ஆகிய படங்கள் எதிர்பார்த்த வெற்றியையும் தராததால் லைகா நிதி நெருக்கடியில் சிக்கியுள்ளதாகத் தெரிகிறது.

இறுதியாக, நடிகர் விஜய்யின் மகன் ஜேசன் சஞ்சய் மற்றும் இந்தியன் - 3 ஆகிய படங்களே லைகா தயாரிப்பில் உள்ளன.

ஆனால், அதை தொடர்ந்து லைகா தயாரிக்கும் படங்கள் அறிவிக்கப்படவில்லை. இதனால், லைகா சினிமா தயாரிப்பிலிருந்து விலகுவதாகத் தகவல்கள் வெளியாகின.

அந்நிறுவனத்திற்கு ஏற்பட்ட நிதி நெருக்கடி மற்றும் கடன் பிரச்னைகள் முடிவடைந்ததும் மீண்டும் திரைப்படத் தயாரிப்பிற்கு வரலாம் என லைகா நிறுவனர் சுபாஸ்கரன் முடிவு செய்துள்ளதாகக் கூறப்பட்டது.

இந்த நிலையில், லைகா 2 நட்சத்திர நடிகர்களின் படங்களைத் தயாரிக்க முடிவு செய்துள்ளதாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன. இதற்கான, அறிவிப்புகள் விரைவில் வெளியாகும் எனத் தெரிகிறது.

இதையும் படிக்க: கோலிவுட் ஸ்டூடியோ!

செல்வாக்கு உயரும் இந்த ராசிக்கு: வார பலன்கள்!

ஜோதிடர் கே.சி.எஸ் ஐயர் இந்த வார (ஏப்ரல் 04 - 10) பலன்களைத் துல்லியமாக நமக்குக் கணித்து வழங்கியுள்ளார். படித்துப் பயன் பெறுங்கள்.மேஷம் (அசுவினி, பரணி, கார்த்திகை முதல் பாதம் முடிய)செல்வாக்கு உயரும். கு... மேலும் பார்க்க

எம்புரான் தயாரிப்பாளர் அலுவலகங்களில் அமலாக்கத்துறை சோதனை!

எம்புரான் படத்தின் தயாரிப்பாளரான கோகுலம் கோபாலன் அலுவலகங்களில் அமலாக்கத்துறையினர் சோதனை நடத்தி வருகின்றனர். எம்புரான் திரைப்படம் கடந்த வாரம் (மார்ச் 27) திரையரங்குகளில் வெளியானது. படம் வெளியான நாள்முத... மேலும் பார்க்க

நாச்சியார் கோயிலில் பங்குனி பிரம்மோற்சவ திருவிழா கொடியேற்றம்!

கும்பகோணம் நாச்சியார் கோயில் வஞ்சுளவள்ளி தாயார் சமேத சீனிவாசப்பெருமாள் திருக்கோயிலில் பங்குனி பிரம்மோற்சவ திருவிழா கொடியேற்றத்துடன் தொடங்கியது.தஞ்சாவூர், கும்பகோணம் அருகே திருவிடைமருதூர் தாலுகா நாச்சி... மேலும் பார்க்க

கார்த்தி சுப்புராஜ் வெளியிட்ட மெட்ராஸ் மேட்னி பட போஸ்டர்..!

இயக்குநர் கார்த்திக் சுப்புராஜ் மெட்ராஸ் மேட்னி என்ற புதிய படத்தினை போஸ்டரை வெளியிட்டு படக்குழுவுக்கு வாழ்த்து தெரிவித்துள்ளார். மெட்ராஸ் மோஷன் பிக்சர்ஸ் தயாரிப்பில் அறிமுக இயக்குநர் கார்த்திகேயன் மணி... மேலும் பார்க்க

குட் பேட் அக்லி - டிரைலர் அப்டேட்!

குட் பேட் அக்லி திரைப்படத்தின் டிரைலர் வெளியீடு பற்றிய தகவல் வெளியாகியுள்ளது.இயக்குநர் ஆதிக் ரவிச்சந்திரன் இயக்கத்தில் அஜித் குமார் நடித்துள்ள குட் பேட் அக்லி திரைப்படம் இந்த ஆண்டின் மிகவும் எதிர்பார்... மேலும் பார்க்க

ஒரேயொரு வாழ்க்கை வரலாறாக வாழ வேண்டும்...! விக்ரம் வெளியிட்ட விடியோ!

வீர தீர சூரன் குறித்து நடிகர் விக்ரம் தனது இன்ஸ்டா பக்கத்தில் விடியோ வெளியிட்டு நன்றி தெரிவித்துள்ளார். தங்கலான் படத்திற்குப் பிறகு விக்ரம் நடிப்பில் வெளியான திரைப்படம் வீர தீர சூரன். சித்தா பட இயக்கு... மேலும் பார்க்க