தனுஷுக்கு வில்லனாகும் ஜெயராம்?
தனுஷின் புதிய படத்தில் நடிகர் ஜெயராம் வில்லனாக நடிக்கவுள்ளதாகத் தகவல் வெளியாகியுள்ளது.
நடிகர் தனுஷ் இயக்கிய நிலவுக்கு என்மேல் என்னடி கோபம் திரைப்படம் கடந்த மாதம் திரையரங்குகளில் வெளியாகி கலவையான விமர்சனங்களையே பெற்றது. அதேபோல், தனுஷ் இயக்கி, நடித்த இட்லி கடை படம் கோடை வெளியீடாகத் திரைக்கு வருகிறது.
தற்போது, ஆனந்த் எல் ராய் இயக்கிவரும் ‘தேரே இஷ்க் மெயின்’ படத்தில் நடித்து வருகிறார்.
இப்படத்தை முடித்ததும், போர் தொழில் இயக்குநர் விக்னேஷ் ராஜா படத்தில் இணைவார் எனத் தெரிகிறது.
இதில் நடிகர் தனுஷுக்கு ஜோடியாக நடிகை மமிதா பைஜூ ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ளராம். இந்த நிலையில், இப்படத்தில் நடிகர் ஜெயராம் வில்லனாகவும் நடிகர் அர்ஜுன் முக்கிய கதாபாத்திரத்திலும் நடிப்பதாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன.
இதையும் படிக்க: அதிக தொகைக்கு விற்கப்பட்ட இட்லி கடை ஓடிடி உரிமம்!