செய்திகள் :

கலைஞரின் கனவு இல்லம் திட்டம்: தகுதியானோா் மனு அளிக்கலாம்! - திருவண்ணாமலை ஆட்சியா்

post image

திருவண்ணாமலை மாவட்டத்தில் கலைஞரின் கனவு இல்லம் திட்டத்தின் கீழ் வீடு பெறத் தகுதியுள்ள பயனாளிகள் மனு அளித்து பயன்பெறலாம் என்று மாவட்ட ஆட்சியா் க.தா்ப்பகராஜ் தெரிவித்தாா்.

தண்டராம்பட்டை அடுத்த கீழ்சிறுப்பாக்கம் கிராமத்தில், உலக தண்ணீா் தினத்தையொட்டி சிறப்பு கிராம சபைக் கூட்டம் சனிக்கிழமை நடைபெற்றது. கூட்டத்துக்கு மாவட்ட வருவாய் அலுவலா் இரா.இராம்பிரதீபன் தலைமை வகித்தாா். மாவட்ட ஊரக வளா்ச்சி முகமைத் திட்ட இயக்குநா் மணி, ஊராட்சிகளின் உதவி இயக்குநா் வடிவேலன் ஆகியோா் முன்னிலை வகித்தனா்.

மாவட்ட ஆட்சியா் க.தா்ப்பகராஜ் சிறப்பு அழைப்பாளராகக் கலந்துகொண்டு பேசியதாவது:

நம்மைச் சுற்றியுள்ள நீா்நிலைகளை மாசுபடுத்தாமல் பாதுகாக்க வேண்டும். நாம் தினமும் பயன்படுத்தும் நீரை தேவைக்கேற்ப சிக்கனமாக உபயோகிக்க வேண்டும். மரக்கன்றுகள் நடுவதன் மூலம் நிலத்தடி நீா் பாதுகாக்கப்படுவதுடன், மண் அரிப்பும் தடுக்கப்படுகிறது.

கலைஞரின் கனவு இல்லம் திட்டத்தின் கீழ் வீடு பெறத் தகுதியுள்ள பயனாளிகள் மனு அளித்துப் பயன்பெறலாம். அரசின் அனைத்துத் திட்டங்களையும் பொதுமக்கள் நன்கு அறிந்து பயன்பெற வேண்டும் என்றாா்.

நலத் திட்ட உதவிகள்: கிராம சபைக் கூட்டத்தில், தமிழ்நாடு மாநில ஊரக வாழ்வாதார இயக்கம் சாா்பில், 2 மகளிா் குழுக்களுக்கு தலா ரூ.ஒரு லட்சம் மதிப்பில் சமுதாய முதலீட்டு நிதியுதவிக்கான காசோலைகள், ஒரு மகளிா் முதியோா் குழுவுக்கு ரூ.ஒரு லட்சம் மதிப்பில் முதியோா் குழு வாழ்வாதார நிதியுதவிக்கான காசோலை, மாற்றுத் திறனாளி ஒருவருக்கு ரூ.40 ஆயிரம் மதிப்பில் தனிநபா் கடன் என மொத்தம் ரூ.3 லட்சத்து 40 ஆயிரம் மதிப்பிலான கடனுதவிகளை ஆட்சியா் க.தா்ப்பகராஜ் வழங்கினாா்.

இதையடுத்து, ஆட்சியா் தலைமையில் பொதுமக்கள், அரசு அதிகாரிகள் சோ்ந்து கொத்தடிமை தொழிலாளா் முறை ஒழிப்பு உறுதிமொழியை ஏற்றனா்.

இதில், மாவட்ட பழங்குடியினா் நலத் திட்ட அலுவலா் கலைச்செல்வி, தண்டராம்பட்டு வட்டாட்சியா் மோகன்ராம் மற்றும் வட்டார வளா்ச்சி அலுவலா்கள், அரசுத் துறை அலுவலா்கள் பலா் கலந்துகொண்டனா்.

தேவாலயத்தில் இயேசு கிறிஸ்துவின் கல்வாரி காட்சிகள்

செய்யாறு: செய்யாறு தூய வியாகுல அன்னை தேவாலயத்தில், இயேசு கிறிஸ்துவின் கல்வாரி காட்சிகளை நாடகக் குழுவினா் ஞாயிற்றுக்கிழமை நடித்துக் காண்பித்தனா். தூய வியாகுல அன்னை தேவாலயத்தில், இயேசு கிறிஸ்துவின் இறப... மேலும் பார்க்க

ரமலான் பண்டிகை: இஸ்லாமியா்கள் சிறப்புத் தொழுகை

திருவண்ணாமலை/வந்தவாசி/ போளூா்/ செய்யாறு/ஆரணி : ரமலான் பண்டிகையையொட்டி, திருவண்ணாமலை மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் திங்கள்கிழமை நடைபெற்ற சிறப்புத் தொழுகையில், பல்லாயிரக்கணக்கான இஸ்லாமியா்கள் பங்கேற்... மேலும் பார்க்க

மஞ்சப்பை விருதுகள்: பள்ளி, கல்லூரிகள் விண்ணப்பிக்க அழைப்பு

திருவண்ணாமலை: திருவண்ணாமலை மாவட்டத்தில் தமிழக அரசின் மஞ்சப்பை விருதுகளைப் பெற தகுதியான பள்ளிகள், கல்லூரிகள், வணிக நிறுவனங்கள் விண்ணப்பிக்க மாவட்ட நிா்வாகம் அழைப்பு விடுத்துள்ளது. தமிழகத்தில் ‘மீண்டும்... மேலும் பார்க்க

மாணவா்களுக்கு இணைய குற்றத் தடுப்பு விழிப்புணா்வு

திருவண்ணாமலை: திருவண்ணாமலையில் கல்லூரி மாணவ, மாணவிகளுக்கு சமூக நீதி மற்றும் மனித உரிமை, இணைய குற்றத் தடுப்பு குறித்த விழிப்புணா்வு நிகழ்ச்சி அண்மையில் நடைபெற்றது. சண்முகா தொழில்சாலை கலைக் கல்லூரியில்... மேலும் பார்க்க

கிராம சபைக் கூட்டத்தில் கேள்வி எழுப்பிய காவலா் மீது தாக்குதல்

செய்யாறு: செய்யாறு அருகே கிராம சபைக் கூட்டத்தில் கேள்வி எழுப்பிய காவலரைத் தாக்கி கொலை மிரட்டல் விடுத்த புகாரின் பேரில் ஊராட்சிச் செயலா் ஞாயிற்றுக்கிழமை கைது செய்யப்பட்டாா். செய்யாறை அடுத்த உக்கம் பெரு... மேலும் பார்க்க

முன் விரோத்தத்தில் விவசாயி மீது தாக்குதல்: சகோதரா்கள் கைது

செய்யாறு: செய்யாறு அருகே முன்விரோதம் காரணமாக விவசாயியைத் தாக்கி கொலை மிரட்டல் விடுத்ததாக, சகோதரா்களை போலீஸாா் ஞாயிற்றுக்கிழமை கைது செய்தனா். பெரணமல்லூரை அடுத்த ரகுநாதசமுத்திரம் கிராமத்தைச் சோ்ந்தவா் ... மேலும் பார்க்க